15 நிமிடத்தில் 500 ஆங்கில சொற்கூட்டல் கூறி 8 வயது சிறுமி உலக சாதனை! - 3ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை
🎬 Watch Now: Feature Video
Published : Feb 7, 2024, 7:19 AM IST
|Updated : Feb 7, 2024, 10:47 AM IST
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி 15 நிமிடங்களில், 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி, நான்கு உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார். கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் - கனிமொழி தம்பதியரின் மகள் பி.ரிதன்யா(8).
இவர் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தொடர்ந்து, 14 நிமிடம் 44 விநாடிகளில் 500 ஆங்கில சொற்களஞ்சிய வார்த்தைகளின் சொற்கூட்டல் கூறி சாதனைப் படைத்துள்ளார்.
இவரது சாதனை, வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்(World Wide Book of Record), இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்(International Book of Record), நோபல் உலக சாதனை (Nobel World Record) மற்றும் அசிஸ்ட் உலக சாதனை (Assist World Record) ஆகிய 4 புத்தகங்களில் இடம் பிடித்தன.
இதையடுத்து, சாதனைப் படைத்த மாணவி ரிதன்யாவை, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து கெளரவித்தார். மேலும், மாணவியின் சாதனைக்கு பலரும் தங்களது பாரட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.