"அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன்" ரஜினிகாந்த் கப் சிப்! - actor rajinikanth about politics
🎬 Watch Now: Feature Video
Published : Mar 14, 2024, 6:10 PM IST
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் பட படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்னையில் இருந்து விமான மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
படப்பிடிப்பு 75% நிறைவடைந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், "படப்பிடிப்பு நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசியல் குறித்துக் கேட்ட போது அரசியல் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மாட்டேன்” கூறிவிட்டுச் சென்றார்.
டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கடைசியாக ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.