புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம்:சவுதி அரேபியாயாவை போல் தண்டனை கொடுங்கள் - நடிகர் நிழல்கள் ரவி ஆவேசம் - நடிகர் நிழல்கள் ரவி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-03-2024/640-480-20948027-thumbnail-16x9-che.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 10, 2024, 8:20 AM IST
சென்னை: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என நடிகர் நிழல்கள் ரவி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் நேற்று (மார்ச் 9) நடிகர் நிழல்கள் ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், " 'வடக்குப்பட்டி ராமசாமி' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 2024ஆம் ஆண்டு வெளியான முதல் வெற்றிப்படம் இதுவாகும். அதில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் இதற்கு மக்கள் நல்ல வரவேற்பளித்துள்ளார்கள்.
இதனைத்தொடர்ந்து ஐந்து படங்கள் நடித்து வருகிறேன். இப்பொழுது படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்வதற்காக வந்துள்ளேன். பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் என்பதை விட, கதை தான் முக்கியம் திரைக்கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாகப் படங்கள் வெற்றி அடையும் என்றார்.
இதனையடுத்து புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது செய்தியாளர்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். சவுதி அரேபியாவில் கொடுக்கும் தண்டனை போல் கொடுக்க வேண்டும். அப்போது தான் குற்றவாளிகள் திருந்துவார்கள்" எனத் தெரிவித்தார்.