திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்! - Annamalaiyar aani thirumanjanam - ANNAMALAIYAR AANI THIRUMANJANAM
🎬 Watch Now: Feature Video
Published : Jul 12, 2024, 4:09 PM IST
திருவண்ணாமலை: ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான், மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாத ஆனி திருமஞ்சனம் என ஆண்டுக்கு 2 முறை கோயிலின் 2ஆம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு 5ஆம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.
அதன்படி, நேற்று சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து சுவாமி புறப்பாடு நடைபெற்று ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளினார். இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி, அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நடராஜ பெருமான் திருக்கோயிலின் திருமஞ்சன கோபுர வாசல் வழியாக வெளியே வந்து நான்கு மாட வீதிகளைச் சுற்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.