தாமிரபரணி நதிக்கு சிறப்பு சீர்வரிசை.. களைகட்டிய ஆடிப்பெருக்கு! - tamirabarani aadi perukku festival - TAMIRABARANI AADI PERUKKU FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : Aug 3, 2024, 10:35 PM IST
திருநெல்வேலி: தமிழர்கள் கொண்டாடி மகிழும் முக்கிய விழாக்களில் ஒன்றாக திகழ்வது ஆடி 18ஆம் நாளான ஆடிப்பெருக்கு விழாவாகும். இந்த விழா தமிழ்நாட்டின் பல்வேறு நதிக்கரைகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெல்லை கைலாசபுரம் படித்துறையில் 108 சீர்வரிசைகளுடன் தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்காக மஞ்சள், பழ வகைகள், காய்கறி வகைகள், பூ வகைகள் போன்ற சீர்வரிசை பொருட்கள் அடங்கிய 108 தாம்பூலங்களை பெண்கள் நெல்லை மீனாட்சிபுரம் திருகீரை சாரதா திருமண மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து, நெல்லை சந்திப்பின் முக்கிய வீதிகள் வழியாக கைலாசபுரம் தாமிரபரணி நதிக்கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இது குறித்து பேசிய பத்மாவதி, “இந்த விழா மூலம் நதிகள் கடவுளுக்கு சமம் எனவும், அவற்றை நாம் மாசுபடாமல் காக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” என்றார். மேலும், பேசிய குழைகாதர், உலகப் புகழ் வாய்ந்த நதி தாமரபரணி, இது ஒரு ஜீவ நதி. கடவுக்கு சமம்மான நதியாகும்” என்றார்.