தூத்துக்குடி: சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ், நகர்புற ஆரம்ப சுகாதார நிதி மையங்களுக்கு சி.எஸ்.ஆர் நிதியுதவின் கீழ் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு சேமநல நிதி சந்தா தொகை காண வட்டி தொகை வழங்குதல் நிகழ்ச்சியானது தூத்துக்குடி மாநகராட்சி கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து கனிமொழியிடம் செய்தியாளர்கள் அமைச்சர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டும் மூன்று மொழி படிக்கின்றனர் ஆனால், ஏழை குடும்பத்தில் வளர்ந்து அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மூன்று மொழி படிக்க தமிழக அரசு தடை போடுகிறது என அண்ணாமலை கேள்வியெழுப்பியது குறித்து கேட்டனர்.
அதற்கு பதிலளித்த தூத்துக்குடி எம்பி கனிமொழி, “யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானலும் படிக்கலாம். யாரையும் எந்த மொழியையும் கற்க வேண்டாம் என திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் தடுப்பதில்லை. மக்களும் எந்த மொழியையும் குறிப்பிட்டு கற்க முடியாது என கூறவில்லை. ஆனால், எந்த மொழியையும் திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை இரட்டை கொலை: "கள்ளக்குறிச்சி சாராய மரணத்தை விட இது கொடூரமானது" - சாட்டை துரைமுருகன் ஆவேசம்!
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் கேந்திர வித்யலாயா பள்ளியில் மூன்றாவது மொழியாக ஜெர்மனி கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெர்மனியை நீக்கி விட்டு மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை வைத்தார்கள். ஆனால், அதற்கான காரணம் தெரியவில்லை. ஜெர்மனி படித்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஆனால் இப்போது சமஸ்கிருந்தம் படிப்பதால் என்ன? பயன். இது போன்று தான் மொழியை திணிப்பது சரியில்லை. நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்” என்றார்.