கோவையில் பேருந்தை வழிமறித்த யானை.. அச்சத்தில் உறைந்த பயணிகள்! - elephant blocking a bus - ELEPHANT BLOCKING A BUS
🎬 Watch Now: Feature Video
Published : May 1, 2024, 2:12 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் ஆழியார் சோதனைச் சாவடி பகுதியில் பேருந்தை வழி மறித்து, எதிரே நடந்து வந்த விடியோ சமூகவலைதளங்களில் வைர்லாகி வருகிறது.
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை நோக்கி வந்த பேருந்து இரவு, பொள்ளாச்சியில் இருந்து வில்லோனியை நோக்கி ஆழியார் சோதனைச் சாவடி மற்றும் கவியருவி இடைப்பட்ட பகுதியில் வந்த போது, எதிரே ஒற்றைக் காட்டு யானை ஹாய்யாக சாலையில் நடந்து வந்துள்ளது. இதைப் பார்த்த ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து பேருந்தை மெதுவாக பின்னோக்கி இயக்கியுள்ளார்.
அதன் பின் பேருந்தை நோக்கி வந்த யானை பேருந்து சேதப்படுத்தாமல் சாலை ஓரமாக சென்றுள்ளது. ஒற்றைக் காட்டு யானை பேருந்தின் எதிரே வந்ததால், பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இதனைத் தொடர்ந்து, வால்பாறையை நோக்கி வரும் வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு வாகனஓட்டிகள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.