பிணவறையில் கேட்பாராற்று கிடந்த உடல்கள்.. மனிதநேயத்துடன் நல்லடக்கம் செய்த சமூக சேவகர் மணிமாறன்! - unclaimed bodies buried
🎬 Watch Now: Feature Video
Published : Jan 29, 2024, 12:49 PM IST
|Updated : Jan 29, 2024, 4:18 PM IST
வேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கடந்த 3 மாதங்களாக ஆதரவற்ற முதியவர்கள் மூவரது உடல் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சமூக சேவகர் மணிமாறன் அரசு மற்றும் காவல்துறையிட உரிய அனுமதி பெற்று 3 உடல்களையும் அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் சென்று பாலாற்றில் உள்ள மயானத்தில் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்தார்.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் மணிமாறன் வெளியிட்ட வீடியோவில், "கடந்த 22 ஆண்டுகளாக ஆதரவற்ற நிலையில் மரணமடைபவர்களின் உடலை கைப்பற்றி நல்லடக்கம் செய்து வருகிறோம். தமிழகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் இந்த சேவையை செய்து வருகிறோம். தற்போது வெளிநாடுகளிலும் இந்த சேவையை மேற்கொண்டு வருகிறோம்" எனக் கூறினார்.
சமூக ஆர்வலர் மணிமாறன் இதுவரை சுமார் 2,200 ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார். கரோனா காலக்கட்டத்தில் கூட மனிதநேயத்துடன் அரசு, சமூக ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்து ஆதரவற்றோர் உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்யும் உன்னத சேவையை அவர் செய்தது குறிப்பிடத்தக்கது.