விபத்து நடைபெற்ற உடனே காவலர் செய்த நெகிழ்ச்சி செயல் - வீடியோ வைரல்! - police clean road - POLICE CLEAN ROAD
🎬 Watch Now: Feature Video
Published : May 17, 2024, 7:37 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சாலையில் இருசக்கர வாகனத்தில் சிறுமியுடன் சென்று கொண்டிருந்தவர் திடீரென சாலையில் இருந்த மணலால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து. அப்பகுதியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அவர்களை மீட்டு அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர், சாலையில் உள்ள மணலை துடைப்பத்தால் பெருக்கி தூய்மைப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டை பகுதியில் உள்ள பட்டேல் யாகூப் சாலையில், இருசக்கர வாகனத்தில் ஒருவர் சிறுமியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலை முழுவதும் மணல் இருந்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவ்வழியாகச் சென்ற கொண்டிருந்த வாணியம்பாடி கிராமிய காவல் உதவி ஆய்வாளர் விஜய் என்பவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி அவர்களை மீட்டு அனுப்பி வைத்துவிட்டு சாலை முழுவதும் இருந்த மணலை துடைப்பத்தால் பெருக்கி தூய்மைப்படுத்தினார். இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.