கடலூரில் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி முதியவர் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி வீடியோ! - சக்கரத்தில் சிக்கி விபத்து
🎬 Watch Now: Feature Video
Published : Mar 7, 2024, 4:39 PM IST
கடலூர்: கடலூர் மாவட்டம், குண்டு உப்பலவாடி பகுதியைச் சேர்ந்தவர் திருஞானம் (65). இவர் அதே பகுதியில் மாவு அரவை மில் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று (மார்ச் 6) காலை திருஞானம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று, மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை எதிரில் உள்ள சென்டர் மீடியனில் எதிர்பாராத விதமாக மோதி திடீரென இடது புறம் விழுந்துள்ளார். அப்போது, கடலூரிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி, திருஞானம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இது குறித்த தகவல் புதுநகர் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருஞானம் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.