தடுப்புச்சுவரைத் தாண்டி வீட்டுக்குள் குதித்த சிறுத்தை.. நாயை கவ்விக் கொண்டு ஓடும் பரபரப்பு காட்சி! - leopard catch a dog at Kotagiri - LEOPARD CATCH A DOG AT KOTAGIRI
🎬 Watch Now: Feature Video
Published : Jun 13, 2024, 3:34 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வனத்தையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும், சாலைகளிலும் அவ்வப்போது சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உலா வருவது வழக்கம். ஆனால், சமீப காலமாகவே வன விலங்குகள் உணவைத் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினரும் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கோத்தகிரி அருகே உள்ள ராம்சந்த் குப்புட்டிக்கம்பை பகுதியில் புகுந்த சிறுத்தை, ஒரு வீட்டின் மதில் சுவற்றைத் தாண்டி வீட்டுக்குள் குதித்துள்ளது. பின்னர், உணவைத் தேடி அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்துள்ளது. அந்த சத்தத்தைக் கேட்ட வீட்டு உரிமையாளர், விளக்கை எரியவிட்டு சத்தம் எழுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சிறுத்தை அருகே இருந்த வளர்ப்பு நாயை கவ்விக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டதைத் தொடர்ந்து, ஓடிய சிறுத்தை எங்கே சென்றது என வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.