மீட்க வந்தவருக்கு சர்ப்பரைஸ்.. பூனைக்குட்டியின் விளையாட்டுச் செயல்! - tenkasi cat rescue - TENKASI CAT RESCUE
🎬 Watch Now: Feature Video
Published : Apr 18, 2024, 5:52 PM IST
தென்காசி: “அவரு யாரு அவரு புறாவுக்கே பெல் அடிச்சவராச்சே” என்ற விஜய் பட காமெடி போல ஆகி விட்டது தென்காசி அருகே தீயணைப்புத்துறைக்கு குட்டி பூனை கொடுத்த திடீர் நகைச்சுவை.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ளது பாம்புக்கோவில் சந்தை. இங்கு இருக்கும் பழைய கிணற்றில் பூனைக் குட்டி ஒன்று தவறி விழுந்துள்ளது. நீண்ட நேரமாக உள்ளே இருந்து கத்திக்கொண்டு இருந்த அந்த பூனைக் குட்டியை, ஊர் மக்கள் மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களால் முடியாமல் போகவே, அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர். கயிறு கட்டையுடன் கிணற்றில் இறங்கி பூனைக் குட்டியைக் காப்பாற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். பாறை இடுக்கில் அமர்ந்துகொண்டு இவர்கள் செய்யும் செயலை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த அந்த பூனைக் குட்டி, “என்ன ராமசாமி ஆளையே பாக்க முடியல.... வரட்டா” என டாட்டா காட்டி விட்டுத் தாவிக் குதித்து மேலே ஏறிச்சென்றது. இதைப் பார்த்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், மறுபக்கம் "என்ன கோபால் அத்தனையும் நடிப்பா" என ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்று தவறி விழுந்த பயணி.. நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்! - Man Falling Of Train