தூரத்திய தெரு நாய்கள்..பதறிப் போய் சாக்கடைக்குள் விழுந்த பெண்- சிசிடிவி காட்சிகள் வைரல்! - DOG ISSUE
🎬 Watch Now: Feature Video


Published : Oct 13, 2024, 10:45 PM IST
தேனி : தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெரு நாய்கள் சாலை ஓரங்களில் சுற்றி வருகின்றன. தெரு நாய்கள் தெருக்களில் செல்லும் பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்களை துரத்துவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் தேனி பழைய டிவிஎஸ் ரோடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணை இரண்டு நாய்கள் துரத்திக் கொண்டு கடிக்க வந்தன. நாயைப் பார்த்ததும் அப்பெண் நாயிடம் இருந்து தப்பிபதற்காக வேகமாக ஓடியதில் அவர் அருகில் இருந்த சாக்கடைக்குள் விழுந்து விட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன் காட்சிகள் அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
தற்போது இந்த காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களை நகராட்சி நிர்வாகம் பிடித்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.