குன்னூர் தீயணைப்பு நிலையத்திற்குள் புகுந்த கரடி.. அச்சத்தில் மக்கள்! - bear entered Coonoor fire station - BEAR ENTERED COONOOR FIRE STATION
🎬 Watch Now: Feature Video
Published : May 14, 2024, 4:13 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டம். இங்குள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள், கரடிகள், புலிகள், பன்றிகள், பறவைகள், ஊர்வன உள்ளிட்ட வன உயிரினங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இங்குள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களை அழித்து, காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்கள் போன்றவைகள் கட்டி வருவதாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதிக்குள் உள்ள விளை நிலங்களில் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில், நேற்று (மே 13) குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் கரடி ஒன்று புகுந்து உள்ளது. அதனை இரவில் பணியிலிருந்த ஊழியர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பகுதியில் சுற்றித் தெரியும் கரடியை கூண்டு வைத்து பிடித்து, அதனை அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.