நெல்லை நாறும்பூ நாதர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா..40 ஆண்டுகளுக்கு பின்பு கோலாகலம் - naarumbu nathar temple tirunelveli
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: முக்கூடல் அருகே திருப்புடைமருதூரில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற நாறும்பூ நாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் சாய்ந்த கோலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கு தைப்பூச திருவிழா (Thaipusam) 10 நாட்கள் மற்றும் ஆனி உத்திரம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டிராக்டரில் நாயன்மார்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். 63 நான்மார்களின் வீதி உலாவானது தமிழ்நாட்டிலுள்ள மிக சில பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நாயன்மார்களை தரிசனம் செய்தனர். பல்வேறு காரணங்களால் 40 ஆண்டுகளாக நாறும்பூ நாதர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெறாமல் இருந்துள்ளது.
தற்போது அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சியால் இந்தாண்டு நாறும்பூ நாதர் கோயில் வீதியுலா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, திருச்செந்தூர் பாரத உழவர் பணிக் குழுவினர், நாறும்பூ நாதர் கோயிலில் நாயன்மார்கள் மற்றும் சட்டங்களை அமைத்தல் குறித்த பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.