பெரியகுளத்தில் 500 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்..! - பெரியகுளம் ஆஞ்சநேயர் கோவில்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 21, 2024, 3:31 PM IST
தேனி: பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் ராம பக்தராகவும், சிறை பிடித்து இருந்த சீதாவை ராமர் மீட்கச் சென்ற போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வானரங்கள் ராம பக்தரான ஆஞ்சநேயரின் தலைமையில் ராமனுக்கு உதவி செய்யச் சென்றதாக ஐதீகம் உள்ளது.
இந்த நிலையில் நாளை அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில்.பெரியகுளத்தில் உள்ள ராம பக்தரான ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுக் கடந்த மூன்று நாட்களாக நான்கு கால யாக பூஜை நடைபெற்று 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் போது ஆஞ்சநேயரின் கருவறைக்கு மேல் புதிதாக வைக்கப்பட்டுள்ள கலசம் மற்றும் ராஜகோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள கலசத்துக்குக் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளிலிருந்து எடுத்துவரப்பட்டுத் தீர்த்த நீரை வேத விற்பார்கள் மந்திரங்கள் ஓதி மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் வந்திருந்த பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தின் போது ஹரே ராமா ஹரே ராம எனப் பக்தர்கள் கோஷமிட்டு கும்பாபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த மக்கள் மீது புண்ணிய நீர் தெளிக்கப்பட்டது. இந்த ஆஞ்சநேயர் மகா கும்பாபிஷேக விழாவில் பெரியகுளம் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.