100 யோகாசனங்கள் செய்தும், 100 திருக்குறள் கூறியும் உலக சாதனை செய்த தென்காசி மாணவன் மாதவன்! - Tenkasi student world record
🎬 Watch Now: Feature Video
தென்காசி: வீரகேரளம்புதூர் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையத்தின் சார்பில் 'சர்வதேச யோகா தின விழா' நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு நோபல் உலக சாதனை புத்தகத்தின் நிர்வாகிகள் அரவிந்த், வினோத் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், வீரகேரளம்புதூர் பஞ்சாயத்து யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை ராமலட்சுமி, பூமாரி, வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் கௌசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவர்களை பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் முத்துப்பாண்டி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் பயிற்சி மையத்தின் மாணவ, மாணவிகள் யோகா நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் ஐந்து வயது மாணவன் மாதவன் 100 யோகாசனங்களை செய்து கொண்டே 100 திருக்குறள்களை மனப்பாடமாக ஒப்புவித்து புதிய நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.
உலக அளவில் யோகாவிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும், உடல் மனநல ஆரோக்கியத்திற்கு யோகாவின் பங்கு குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ஹேமா சரவணன், நோட்டரி வழக்கறிஞர் சுப்பையா, ஆசிரியர் ராமர், வெள்ளப்பாண்டி, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் நிர்வாகி கார்த்தி, சுரண்டை புத்தகத் திருவிழா குழு நிர்வாகி ஆறுமுகம், கோபி, அஜய், ரேவதி மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.