பேருந்து விபத்து மீட்பு பணியில் உயிரிழந்த தலைமைக் காவலர் - குடும்பத்தினருக்கு ரூ.29 லட்சம் நிதி வழங்கிய சக காவலர்கள்! - நிதியுதவி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2024/640-480-20719426-thumbnail-16x9-tppt.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Feb 10, 2024, 9:40 PM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு அவருடன் பயிற்சி முடித்த காவலர்கள் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பினர் சேர்ந்து 28 லட்சத்து 78 ஆயிரம் ரூபாயை வழங்கினர்.
ஆம்பூர் கஸ்பா ஏ பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாணியம்பாடியில் நடைபெற்ற பேருந்து விபத்தில், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் தலைமை காவலர் முரளி ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக காவலர் முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரின் உடல் சொந்த ஊரான ஆம்பூர் கஸ்பா ஏ பகுதியில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தலைமை காவலர் முரளிக்கு திருமணமாகி பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு உதவும் நோக்கில், தலைமை காவலர் முரளியுடன் சேர்ந்து 2003ஆம் ஆண்டில் பயிற்சி முடித்த காவலர்கள், மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர் உதவும் கரங்கள் சார்பில் 28 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி வழங்கப்பட்டது.