அட்சய திருதியை 2024; விமரிசையாக நடைபெற்ற 12 கருட சேவை! - Akshaya Tritiya 2024 - AKSHAYA TRITIYA 2024
🎬 Watch Now: Feature Video
Published : May 10, 2024, 2:33 PM IST
தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய திருதியை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கும்பகோணம் பெரிய தெருவில் அமைக்கப்பட்ட விசேஷ பெரிய பந்தலில் சாரங்கபாணி சுவாமி, சக்ரபாணி சுவாமி, ஆதிவராக பெருமாள், இராமசுவாமி, இராஜகோபால சுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம பெருமாள், சீனிவாசப் பெருமாள் உள்ளிட்ட 12 உற்சவ பெருமாள்கள் தனித்தனி கருட வாகனங்களில் ஒருசேர, ஒரே இடத்தில் மிகப்பெரிய பந்தலின் கீழ் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இவர்களுக்கு நேர் எதிரே சிறிய திருவடியான ஆஞ்சநேய சுவாமி தனி பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு எதிர் சேவை அளித்தார். பிரசித்தி பெற்ற இந்த 12 கருட சேவையினைக் காண, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்வை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் நீர்மோர், பானகம் மற்றும் அன்னபிரசாதங்கள் வழங்கப்பட்டது. கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ தலங்களில் இருந்து 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஒரே இடத்தில் கருட வாகனத்தில் அட்சய திருதியை நாளில் அருள் பாலிப்பது, மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.