அக்னி நட்சத்திரம் நிறைவு; புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு 1,008 இளநீர் கொண்டு அபிஷேகம்! - Manakula Vinayagar temple - MANAKULA VINAYAGAR TEMPLE
🎬 Watch Now: Feature Video
Published : May 28, 2024, 3:35 PM IST
புதுச்சேரி: அக்னி நட்சத்திரம் நிவர்த்தியடைந்துள்ள நிலையில், அருள்மிகு மணக்குள விநாயகருக்கு 1,008 இளநீர் கொண்டு அபிஷேகம் இன்று (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது.
அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ஆம் தேதி துவங்கி 28 நாட்கள் நிகழ்ந்து இன்றுடன் முடிவடைகிறது. அக்னி நட்சத்திர காலங்களில் புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் செஞ்சுரி அடித்தது. இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாக வெப்பம் தணிந்து கோடை மழை பெய்துள்ளது.
இந்நிலையில், அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலில் உள்ள மூலவருக்கு 1,008 இளநீர் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திக்கு 1,008 இளநீர் சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அதிகாரி பழனியப்பன், கோயில் தலைமை குருக்கள் கணேஷ், சீனிவாசன் நாகராஜன் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர். பொதுமக்களை நோய் நொடிகளில் இருந்து காப்பாற்றுவதற்காக இந்த அபிஷேகம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.