சென்னை: உலகமே தற்போது கைபேசியில் தான் இயங்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில், ஒவ்வொருவடைய பணியும் கைபேசி சார்ந்ததாகவே உள்ளது. எந்த ஒரு தகவல்கள் வேண்டும் என்றாலும் கைபேசியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக அறிந்து கொள்கின்றனர்.
ஆனால், கைபேசி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை வோடபோன் வாடிக்கையாளர்கள் உணர்ந்து இருப்பார்கள். ஏனென்றால், வோடபோன் நெட்வொர்க் சேவை மதியம் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் அலைபேசியில் பணி நிமித்தமாகவும், உறவினர்களுடனும் பேச முடியாமலும், இணையதளங்களை பயன்படுத்த முடியாமலும் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
குறிப்பாக, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வோடபோன் தொலைத் தொடர்பு சேவை முற்றிலுமாக முடங்கியதால் அதன் வாடிக்கையாளர்கள் செய்வதறியாது திணறினர். இதையடுத்து மாலை 6 மணிக்கு மேல் நெட்வொர்க் சேவை சரி செய்யப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதையும் படிங்க: தொழில்நுட்ப செயலிழப்பால் உங்கள் விமானம் ரத்தா?.. உடனடியாக இதை செய்யுங்கள்!