ETV Bharat / technology

கடலில் குறையும் உப்பு! வெள்ளத்திற்கு காரணம் அமோக் விளைவா?

உலகளவில் காலநிலையின் சமநிலையை பாதிக்கக்கூடிய விஷயமாக உள்ள அமோக் என்பது என்ன? இது என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

அமோக் பற்றிய கோப்பு படம்
அமோக் பற்றிய கோப்பு படம் (Credits - National Ocean Service website)

சென்னை: காலநிலை மாற்றம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் ஆங்காங்கே கனமழையும் ஆங்காங்கே கடும் வெயிலும் நாம் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றம் என்பது பொதுவாக ஒன்றோடு ஒன்று தொடர்புடையது, அதன் அடிப்படையில் உலக அளவில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் இந்தியாவை கட்டாயம் பாதிக்கும். தற்போது உலகளவில் காலநிலையின் சமநிலையை பாதிக்கக்கூடிய விஷயமாக இருப்பதுதான் அமோக். அமோக் என்பது என்ன? இது என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோ.சுந்தர் ராஜன் நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார்.

அமோக் என்றால் என்ன?: அப்போது அவர் கூறுகையில், “அமோக் (AMOC) என்பது ஆங்கிலத்தில் 'Atlantic meridional overturning circulation' என்று சொல்வார்கள். இது பெருங்கடலின் நீரோட்டங்களை குறிப்பிடப்படுகிறது. உலகத்தின் காலநிலை மற்றும் அதன் மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நீரோட்டங்கள் மற்றும் இல்லையெனில் உலகத்தின் தட்பவெப்பம், காலநிலை, பருவங்கள் எல்லாமே மொத்தமாக மாறி விடும். கடல்வாழ் உயிரினங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் கிடைக்கின்றன.

அமோக் இயங்கும் விதம்: அமோக் இயங்கும் விதம் பெருங்கடலின் நீரோட்ட பாதை ஒரு கன்வேயர் பெல்ட் போல இருக்கும். இது தென் துருவத்தில் இருக்கும் வெப்பத்தை வட துருவத்திற்கும், வட துருவத்தில் இருக்க கூடிய குளிர்ந்த நீரை தென் துருவத்திற்கும் கொண்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் குளிர்ந்த நாடுகளாக இருக்கும்.

குறைந்து வரும் அமோக்கின் வேகம்: ஆனால் அது எப்போதும் குளிர்ந்த பிரதேசமாக இல்லாமல் இருப்பதற்கும், தென் பகுதிகளில் இருக்கக்கூடிய ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா பகுதிகள் முழுவதும் வெப்பமாக இல்லாமல் இருப்பதற்கும் இந்த அமோக் முக்கிய பங்காற்றுகிறது. இந்த அமோக் இயக்கம் இல்லாமல் இருந்திருந்தால் உலகின் பல்வேறு பகுதிகள் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதி இல்லாத இடமாக மாறியிருக்கும். இந்த நீரோட்டமானது ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்று மீண்டும் திரும்பி வர வேண்டும். தற்போது இந்த அமோக்கின் வேகம் குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகிறது.

தற்போது க்ரீன்லாந்தில் இருக்கக்கூடிய பனி பாறைகள் காலநிலை மாற்றத்தின் காரணமாக உருகி வருகிறது. இதனால் கடலில் உள்ள உப்புத்தன்மை குறைந்து வருகிறது. இந்த உப்புத்தன்மை கடலின் நீரோட்டத்திற்கு மிக முக்கியம். அது குறைவதால் கடலின் நீரோட்ட வேகமும் குறைகிறது. மேலும் பெருங்கடலின் வெப்பம் அதிகரிப்பதால் கடல் காற்றின் வேகம் குறைகிறது. நீரோட்டமும் காற்றின் வேகமும் குறைவதால் இந்த அமோக் முழுவதுமாக வலுவிழந்து போகிறது.

இதையும் படிங்க: இடிந்து விழும் நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு.. அச்சத்தில் தவிக்கும் 112 குடும்பங்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமோக் இல்லையெனில் ஏற்படும் விளைவுகள்: ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததில் இந்த அமோக்கின் வலிமை குறையுமா?, குறையாதா? என்று தான் கேள்விகள் இருந்தது. ஆனால் இப்போது இந்த அமோக் எந்த வருடம் முழுமையாக உடைந்து போகும் என்ற பேச்சு வர ஆரம்பித்துவிட்டது. சிலர் 2057 என்றும், சிலர் 2037லேயே இந்த அமோக் முழுவதுமாக உடைந்து விடும் என்று சொல்கின்றனர்.

  • அமோக் முற்றிலுமாக உடைந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் பாதி பகுதி பனியால் முழுமையாக மூடிவிடும். அடுத்த 30 ஆண்டுகளில் மொத்த இங்கிலாந்தும் பனியால் மூடிவிடும்.
  • வடபகுதியில் இருக்கக்கூடிய குளிர்ந்த காற்றும், நீரும் தென் பகுதிக்கு வராது. அதே போல தென் பகுதியில் வெப்பம் கடுமையாக இருக்கும்.
  • தண்ணீர் கிடைப்பது கூட அரிதாக மாறிவிடும்.
  • காலநிலை மாற்றத்தில் 9 முனை புள்ளிகள் உள்ளன. இந்த 9 புள்ளிகள் தான் காலநிலை சீராக இருப்பதற்கும் நிலை குலையாமல் இருப்பதற்கும் தாங்கு கல்லாக இருக்கின்றன. இந்த முனை புள்ளிகளில் 6 முனை புள்ளிகள் தங்களுடைய உச்ச நிலையை அடைந்துவிட்டன. அதில் இந்த அமோக்கும் ஒன்று. இவை முழுவதும் உச்சநிலையை அடைந்தால் மிகப்பெரிய விளைவை இந்த உலகம் சந்திக்கும்.
  • இது உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து இடங்களையும் கடுமையாக பாதிக்கும்.
  • இந்தியாவிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். வெப்பம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதிகமான மழை பெய்யும். எங்கெல்லாம் மழை பெய்கின்றதோ, மேலும் அங்கெல்லாம் வெப்பம் அதிகரிக்கும்.
  • அதுமட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.
  • இது கடலின் சமநிலையை பெரிதும் பாதிக்கிறது. மேலும் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனுக்கும் கடல் வாழ் உயிரினத்திற்கும் சம்பந்தம் உள்ளது. இவ்வாறு இயற்கையில் இருப்பது ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. இந்த அமோக் குறித்து அனைத்து இடங்களிலும் ஆராய்ச்சி செய்வது மிக கடினம்.

அமோக்கை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்: எனவே ஆராய்ச்சியாளர்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து அங்கே நடைபெற கூடிய மாற்றத்தை உலகளாவிய பகுதிகளில் ஒப்பிட்டு, அது குறித்து தீவிர ஆராய்ச்சி செய்கின்றனர். அமோக் சுக்குநூறாக உடைந்து போனால் இப்போது நாம் பார்க்கும் உலகம், பின்னர் இருக்காது. இதை சரி செய்வதற்கான ஒரே வழி, உலகம் கார்பன் உமிழ்வதை குறைக்க வேண்டும். பாரிஸ் ஒப்பந்தத்தின்படி 1.5க்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய சூழலை பார்க்கையில் அது நடக்காது என்பது போலத்தான் உள்ளது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.