பென்சகோலா, புளோரிடா: போயிங்கின் ஸ்டார்லைனர் காப்ஸ்யூலில் ஏற்பட்ட தொடர்ச்சியான கோளாறுகளால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி ஆய்வாளர்கள் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் நீடித்தது. இதனைத்தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏழு மாதங்கள் தங்கியிருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்களின் குழுவை ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) டிராகன் விண்கலம் பூமிக்குக் கொண்டுவந்தது.
நான்கு க்ரூ-8 விண்வெளி வீரர்கள் தரையிறக்கப்பட்டனர். மார்ச் 2024-இல் தொடங்கப்பட்ட க்ரூ-8 மிஷன், நாசா விண்வெளி வீரர்களான மேத்யூ டொமினிக் (Matthew Dominick), மைக்கேல் பாராட் (Michael Barratt), ஜீனெட் எப்ஸ் (Jeanette Epps) மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கிரெபென்கின் (Alexander Grebenkin) ஆகியோரை உள்ளடக்கியது.
இந்த குழு விண்வெளியில் 232 நாள்கள் செலவழித்தது, பூமியை 3,760 முறை சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கிட்டத்தட்ட 100 மில்லியன் மைல்கள் இவர்கள் பயணம் செய்துள்ளனர்.
Dragon splashes down off the coast of Florida with the Crew-8 astronauts after spending 235 days on-orbit and completing SpaceX’s 13th human spaceflight mission pic.twitter.com/LR6uTLWX2F
— SpaceX (@SpaceX) October 25, 2024
இவர்கள் வந்த ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் கடலில் விழுந்தவுடன், மீட்புக் குழுக்கள் டிராகன் விண்கலத்தை விரைவாகப் பாதுகாத்து மீட்டனர். அப்படியே க்ரூ-8 உறுப்பினர்களுடன் விண்கலத்தை தங்கள் மீட்புக் கப்பலில் ஏற்றினர். அதன்பிறகு, மீட்பு கப்பலில் பாதுகாப்பாக விண்கலத்தின் உள்ளிருந்த நான்கு பேரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு மேம்பட்ட சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Splashdown. Welcome home, #Crew8! After a science mission of over seven months living and working on the @Space_Station, the crew of four are back on Earth. pic.twitter.com/6tvEBQRgLI
— NASA (@NASA) October 25, 2024
இதையும் படிங்க |
க்ரூ-9 உடன் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்:
க்ரூ-8 டிராகன் விண்கலம் ஆரம்பத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் உள்ளிட்ட போயிங் ஸ்டார்லைனர் க்ரூ ஃப்ளைட் சோதனை விண்வெளி வீரர்களுக்கு அவசரகால விண்கலமாக சேவை அளிக்கும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால், நாசா இறுதியில் வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை க்ரூ-9 டிராகனில் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 2025-இல் இவர்கள் இருவரையும் பூமிக்குக் கொண்டுவர நாசா முடிவுசெய்துள்ளது.
சுமார் 140 நாள்களாக விண்வெளி நிலையத்தில் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் வரவைக் காத்து உலக நாடுகளே காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை பத்திரமாக மீட்க நாசா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.