ETV Bharat / technology

மொபைல் சூடாகிறதா? காரணம் என்ன? சரி செய்வது எப்படி? தெரிந்துகொள்ளுங்கள்.! - How to solve Phone Overheating

சாதாரணமாகவே செல் ஃபோன்கள் சூடாகும், இந்த கோடை வெயிலில் அது இன்னும் அதிகமாகி உள்ள நிலையில், அவற்றை குளிர்விப்பது எப்படி என தெரிந்துகொள்வோம்.

Etv Bharat
கோப்புக்காட்சி (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 8:10 PM IST

சென்னை: நாடு முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் உயிர்கள் மட்டும் இன்றி வீட்டில் உள்ள தொழில்நுட்ப உபகரணங்களும் அதீத வெப்பத்தின் விளைவுகளுக்கு ஆளாகின்றன. அதிலும் குறிப்பாக நாம் 24 மணி நேரமும் தொடர்ந்து பயன்படுத்தும் மொபைல் ஃபோன்கள் அதீத சூடு காரணமாக வெடிக்கும் ஆபத்துகள் கூட இருக்கின்றன. இந்த சூழலில் மொபைல் ஃபோன் சூடாகாமல் இருக்கவும், சூடானால் அதை கட்டுக்குள் கொண்டுவரவும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

உங்கள் மொபைல் ஃபோன் ஐ ஃபோனாக இருந்தாலும், ஆன்ட்ராய்டு ஃபோனாக இருந்தாலும் சரி சூடாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன... அதில் மிக முக்கியமான காரணங்களை இங்கே பார்க்கலாம். வெயில் மற்றும் சூடான சூழல் காரணமாக ஃபோன் வெப்பம் அடையலாம்.

பேட்டரி சூடாவதால் மொபைல் வெப்பம் அடையும்: மொபைலை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருந்தால், அதன் பயன்பாடு அதிகரித்து பேட்டரி சூடாகும், அதனை தொடர்ந்து மொபைலின் ஒட்டுமொத்த பகுதியும் வெப்பம் அடையும்.

Recent Apps-களை க்ளியர் செய்யவும்: உங்கள் மொபைலை நீங்கள் பயன்படுத்திய பிறகு Recent Apps-களை க்ளியர் செய்ய வேண்டும். இல்லை என்றால் அது தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்கும். இதன் காரணத்தாலும் உங்கள் மொபைல் வெப்பம் அடையும்.

நீண்ட நேரம் சார்ஜ் போடுதல்: அதிக வெப்பம் அடைவதற்கான மற்றொரு காரணம் அதிக நேரம் சார்ஜ் செய்வது. மேலும் இடைவெளி விட்டு மீண்டும், மீண்டும் சார்ஜ் போடுவது. இதுபோன்ற காரணங்களால் உங்கள் மொபைல் சூடாகும்போது சில நேரங்களில் அது வெடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், மொபைலை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.

உங்கள் மொபைலை குளிர்விக்க 5 வழிகளை இங்கே பார்க்கலாம்.!

உங்கள் மொபைலை ஆஃப் செய்து ஆன் செய்யலாம் அல்லது ரீ ஸ்டார்ட் செய்யலாம்: இதன் மூலம் செயல்பாட்டில் இருக்கும் App-கள் அனைத்தும் க்ளியர் ஆகிவிடும். அதை தவிர்த்து நீங்கள் அப்படியே தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு இருந்தால் உங்கள் மொபைல் விரைவில் செயலிழக்க வாய்ப்பு உள்ளது.

மொபைலின் திரையில் குறைந்த வெளிச்சத்தை வைத்து பயன்படுத்தலாம்: திரையின் வெளிச்சத்தை அதாவது ஸ்கிரீன் ப்ரைட்னஸை குறைவாக வைத்துப் பயன்படுத்துங்கள். இல்லை என்றால் பேட்டரி சூடாகி மொபைல் வெப்பம் அடையும்.

உங்கள் மொபைல் சூடாக இருந்தால் கேஸ் கவரை அகற்றுங்கள்: கேஸ் கவர்கள் போடப்பட்டிருக்கும்போது மொபைலின் சூடு விரைவில் தனியாது. இதனால் அதை அகற்றிவிட்டு வையுங்கள்.

டேட்டா மற்றும் பிற ஷேரிங் செயலிகளை ஆஃப் செய்து வையுங்கள்: டேட்டா, ஹாட்ஸ்பாட் அல்லது புளூடூத் இருந்தால், உங்கள் ஃபோன் அதிகம் சூடாக வாய்ப்பு உள்ளது. இதனால், நீங்கள் பயன்படுத்தாத நேரங்களில் அதை ஆஃப் செய்து வையுங்கள்.

மொபைலுக்கு ஏற்ற சார்ஜர்களை பயன்படுத்துங்கள்: உங்கள் மொபைல் எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதோ அதே நிறுவனத்தின் சார்ஜர்களை பயன்படுத்துங்கள். மாற்றி பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைல் சூடாக அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க: ஐபோன்கள் பயனர்களே உஷார்..! ஆப்பிள் போன்களில் ஸ்பைவேர் தாக்குதல்! ஆப்பிள் எச்சரிக்கை! - Apple Alert Users To Spyware Attack

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.