ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஒன்பிளஸ் 13 (Oneplus 13) ஸ்மார்ட்போனை இம்மாதம் வெளியிட உள்ளது. பல பிரீமியம் மொபைல்களுக்கு போட்டியாகக் களமிறங்கும் இந்த ஸ்மார்ட்போனை குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துவருகின்றன.
அதிலிருந்து சில முக்கியமான அம்சங்கள் எவை என்பதைப் பார்க்கலாம். ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16), கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் டெக் சந்தைக்குள் கால்பதித்தன. அவற்றுடன் ஒன்பிளஸ் 13 போட்டியை சமாளிக்குமா என்பதை, அதன் சிறப்பம்சங்கள் வைத்து தெரிந்துகொள்ளலாம்.
ஒன்பிளஸ் 13 திரை (டிஸ்ப்ளே):
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 6.8-அங்குல (inch) 2K 10-bit எல்டிபிஓ (LTPO) BOE X2 OLED திரை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (Refresh Rate), மென்மையான காட்சி அனுபவத்தை வழங்கும். முந்தைய மாடல்களைப் போலல்லாமல், இந்த போனில் சற்று வளைந்த விளிம்புகளுடன் கூடிய 3டி திரை கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 செயல்திறன்:
SM8750 is officially named as Snapdragon 8 Elite!
— Piyush Bhasarkar (@TechKard) October 8, 2024
Is it the OnePlus 13 in Promo video? #Qualcomm #Snapdragon8Elite #OnePlus13 pic.twitter.com/ksQZ9GsZJb
ஒன்பிளஸ் 13 மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 (Qualcomm Snapdragon 8 Gen 4) சிப்செட் பயன்படுத்தப்படுகிறது. புதிய தலைமுறை ஸ்னாப்டிராகன் சிப்செட், இந்த ஸ்மார்ட்போனின் செயல்திறனை மேம்படுத்தும். மேலும், நீட்டிக்கக்கூடிய ரேம் அம்சத்தின் வாயிலாக 24ஜிபி வரை ரேமை பயன்படுத்தும் முறையை ஒன்பிளஸ் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்களின்படி, அதிதிறன் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 13 சந்தைக்குள் வலம்வர தயாராகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. வெளியாகும்போதே, கூகுள் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர் ஓஎஸ் உடன் மேம்படுத்தப்பட்ட இயங்குதளம் கொடுக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
ஒன்பிளஸ் 13 கேமரா:
தற்போதையை டெக் உலகில், மக்கள் அதிகம் சமூக வலைத்தளங்கள் பக்கம் சார்ந்திருப்பதால், கேமராக்கள் சிறந்ததாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 50 மெகாபிக்சல் (Megapixel) முதன்மை சென்சாருடன், 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா என மூன்று கேமராக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு சிறந்த கேமரா பேக்கேஜாகப் பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 பேட்டரி:
இதில் ஆப்பிள் ஐபோன்களில் வரும் மேக்-சேஃப் (MagSafe) போன்று வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கொண்டுவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Qi2 தரத்திலான காந்தவளையத்தை (Magnetic Ring) இதில் நிறுவி, பாதுகாப்பாகச் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக 50W வேகத்தில் போனை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்துகொள்ளலாம். சாதாரணமாக 100W வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும். மேலாக, போனில் 6,000mAh பேட்டரி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus 13:
— Jason Castellano (@JasonsTechNews) October 11, 2024
What We Know?
• 6.82" 2k oledb120 hz ltpo boe x2 micro quad curved display
• snapdragon 8 gen 4
• 50 mp main camera
• 50 mp periscope camera
• 50 mp ultrawide camera
• hasselblad color calibration
• hasselblad master mode
• usb type c 3.2 port
•… pic.twitter.com/LdWM1OK6xd
பிற சிறப்பு அம்சங்கள்:
- அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
- மேம்படுத்தப்பட்ட ஹாப்டிக்ஸ் ஃபீட்பேக் (Haptics Feedback)
- டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள்
இதையும் படிங்க |
எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 13 விலை:
ஒன்பிளஸ் 13 போனின் விலை ஒன்பிளஸ் 12 மாடலை விட சற்று அதிகமாக இருக்கலாம். இந்தியாவில் இந்த போன் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை என்றாலும், ரூ.74,999 முதல் இந்த ஒன்பிளஸ் 13 (Oneplus 13) ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
முடிவாக, ஒன்பிளஸ் 13, சக்திவாய்ந்த செயலி, அசத்தலான கேமரா மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் போன்ற அம்சங்களுடன் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் இந்த போனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.