ஹைதராபாத்: மஹிந்திரா நிறுவனம் தனது தார் ராக்ஸ் (Thar ROXX) காரை தற்போது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையாகி வந்த மூன்று டோர் கொண்ட காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக, இந்த ஐந்து டோர் கொண்ட தார் ராக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மஹிந்திராவின் 5 டோர் கொண்ட தார் ராக்ஸ் மாடலுக்கும் 3 டோர் கொண்ட தார் எஸ்யூவி மாடலுக்கும் இடையில் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன என்பதை இங்கு காணலாம்.
A day etched in our memory! Relive Launch Day where the origin story of the all-new #TharROXX was revealed, as #THESUV hit the roads.
— Mahindra Thar (@Mahindra_Thar) August 21, 2024
Know more: https://t.co/6Rx3p1ZEna#THESUV #ExploreTheImpossible #TharROXX pic.twitter.com/wFEx29jFqJ
என்ஜின்: தார் மாடலில், 118hp பவர் 300NM டார்க் வெளிப்படுத்தும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்சுடன் 2 வீல் டிரைவ் அமைப்பை கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின்; 130hp பவர் 300NM டார்க் வெளிப்படுத்தும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சுடன்கூடிய 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் செயல்பாடுடைய 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 150hp பவர் 320NM டார்க் வெளிப்படுத்தும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பை உடைய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என மொத்தம் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றது.
தார் ராக்ஸ் மாடலில் 152hp பவர் 330NM டார்க் மற்றும் 175hp பவர் 370NM டார்க் வழங்கும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் செயல்பாடுடைய 2.2 லிட்டர் டீசல் என்ஜின்; கூடுதலாக 162hp பவர் 330NM டார்க் மற்றும் 177hp பவர் 380NM டார்க் வழங்கும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 2 வீல் டிரைவ் அமைப்பை கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என மொத்தம் இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றது.
காரின் அளவுகள்: தார் மாடல் மாடல் 3,985 மிமீ நீளம், 1,820 மிமீ அகலம், 1855 மிமீ உயரம் மற்றும் 2450 மிமீ வீல் பேஸ் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், தார் ராக்ஸ் மாடல் அதற்கு நேர்மாறாக 4,428 மிமீ நீளம், 1870 மிமீ அகலம், 1923 மிமீ உயரம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக 2850 மிமீ வீல் பேஸ் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கூடுதலான வீல் பேஸ் கொண்டு அதிகப்படியான இட வசதியை தார் ராக்ஸ் மாடல் வழங்குகின்றது. மேலும், மூன்று டோர்கொண்ட மாடலான தாரில் பயன்படுத்த முடியாத பூட்ஸ்பேஸ் இருந்த நிலையில் தற்பொழுது பூட்ஸ்பேஸ் 644 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக தார் ராக்ஸ் மாடல் வடிவமைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் இட வசதிக்கான அம்சம் உள்ள மாடலாக பார்க்கப்படுகின்றது.
எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் டிசைன்: 3 டோர் கொண்ட தார் மாடலின் அப்டேட் வெர்ஷனான 5 டோர் தார் ராக்ஸ் மாடலானது பல்வேறு டிசைன் மாற்றங்களை முன்புறத்திலும் மற்றும் பக்கவாட்டிலும் பெற்றிருப்பதுடன், சி-பில்லர் பகுதியில் ஒரு முக்கோண வடிவ கான்ட்ராஸ்ட்டான கருப்பு நிற குவாட்டர் கிளாஸ் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் வழக்கம் போல ஸ்பேர் வீல் ஆனது பொருத்தப்பட்டு முழுமையாக எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தார் மாடலை பொருத்தவரை எல்இடி விளக்குகள் பெரும்பாலும் கொடுக்கப்படவில்லை. மேலும், கூடுதல் சிறப்பம்சமாக தார் ராக்ஸ் காரின் முன் பக்கம் எல்இடி ஹெட் லைட் மற்றும் C வடிவ டிஆர்எல் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.
இண்டீரியர் வசதிகளை பொறுத்தவரையில், தார் காரில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அனலாக் கிளஸ்டர், மேனுவல் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ரிவர்ஸ் கேமரா, 2 ஏர் பேக்குகள் போன்ற அம்சங்கள் உள்ளது. ஆனால், தார் ராக்ஸ் காரில் பனேரோமிக் சன்ரூஃப், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே 360 டிகிரி கேமரா, 6 ஏர் பேக்குகள், லெவல் 2 ADAS போன்ற அம்சங்கள் உள்ளது.
விலை: 3 டோர் பெற்ற மஹிந்திரா தார் எஸ்யூவி மாடல் ரூ.11.35 லட்சம் முதல் துவங்கி ரூ.17.60 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கின்றது. 5 டோர் பெற்ற மஹிந்திரா தார் ராக்ஸ் 2 வீல் டிரைவ் வேரியண்ட் மாடலை பொறுத்தவரையில் ரூ.12.99 லட்சம் முதல் துவங்கி ரூ.20.49 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கின்றது. ஆனால் தார் ராக்ஸ் மாடலின் 4 வீல் டிரைவ் வேரியண்ட் விலை தற்பொழுது வரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆஃப்-ரோடு ரைடர்களுக்கான மஹிந்திராவின் புதிய படைப்பு.. Mahindra Thar ROXX ஸ்பெஷல் என்ன? முழு விவரம்!