மாருதி சுசூகி நிறுவனம், மொத்த உள்நாட்டு கார் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. அதன் ஸ்விஃப்ட் (Swift) மாடல் கார்கள் முதன்முதலாக 2005-ஆம் ஆண்டு அறிமுகமானது. அதுமுதல் தற்போது வரை இந்தியாவில் நன்மதிப்பைப் பெற்றுவரும் ஸ்விஃப்ட் காரின் புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கிலோவுக்கு 32.85 கிலோமீட்டர் மைலேஜ், ரூ.8.19 லட்சம் தொடக்க விலை என கார் சந்தையில் ஸ்மார்ட்டாக களம்கண்டுள்ளது.
செப்டம்பர் 12 வெளியான மாடல் சிஎன்ஜி (CNG) பதிப்பு என்பதால், மக்களின் தேடலும் அதிகரித்துள்ளது. இது மாருதியின் 14-ஆவது சிஎன்ஜி கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி (Maruti Suzuki Swift CNG) காரின் முக்கியமான சிறப்புகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜியின் மைலேஜ் என்ன?
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி 2024 கார் கிலோ சிஎன்ஜிக்கு 32.85 கிலோமீட்டர் (கிமீ) மைலேஜ் தரக்கூடியதாகும். இந்த பிரிவு கார்களில் இது அதிகபட்ச மைலேஜாகப் பார்க்கப்படுகிறது. பெட்ரோலில் இயங்கும் போது, மேனுவல் கியர்பாக்ஸ் லிட்டருக்கு 24.80 கிமீ மைலேஜையும், ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் லிட்டருக்கு 25.75 கிமீ மைலேஜையும் வழங்குகிறது.
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி எந்த வகைகளில் கிடைக்கும்?
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜியை விஎக்ஸ்ஐ (VXI), விஎக்ஸ்ஐ(ஓ) (VXI(o)), இசட்எக்ஸ்ஐ (ZXI) ஆகிய மூன்று மாறுபட்ட வகைகளில் கிடைக்கிறது. முதல் முறையாக சிஎன்ஜி ஆப்ஷன் உள்ள கார் ZXI வகை காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் கப்பலாய் மாறும் கார்கள்.. சிறந்த Water Wading Capacity கார்களின் முழு பட்டியல்!
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜியின் விலை என்ன?
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் VXi விலை ரூ.8.19 லட்சத்திலும், VXi(O) வகை ரூ.8.46 லட்சத்திலும் கிடைக்கிறது. டாப் மாடலான ZXi ரூ.9.19 லட்சம் விலையிலும் கிடைக்கிறது. மேற்கூறப்பட்ட அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்களுக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் திறன்?
புதிய காருக்காக மாருதி நிறுவனம் சுசூகி ஸ்விஃப்ட்டின் மூன்று சிலிண்டர் எஞ்சினை மாற்றியமைத்துள்ளது. இந்த எஞ்சின் 5,700 ஆர்பிஎம்மில் (rpm), 68.79 பிஎச்பி (bhp) ஆற்றலையும், 2,900 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 101.8 என்எம் (Nm) டார்க்கையும் வழங்குகிறது. பெட்ரோலில் இயங்கும் போது, எஞ்சின் 81 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க்கை உற்பத்தி செய்கிறது. புதிய சிஎன்ஜி வகைகள் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஸ்விஃப்ட் பெட்ரோல், 5-வேக ஆட்டோமேட்டிக் (AMT) ஆப்ஷனுடனும் கிடைக்கிறது.
இதையும் படிங்க: புதிய அம்சங்களுடன் வந்துள்ள Royal Enfield Classic 350.. ஸ்பெஷல் என்ன?
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் அம்சங்கள் என்ன?
ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. கூடுதலாக, ஸ்விஃப்ட் S-CNG ஆனது 7-இன்ச் அளவுள்ள ஸ்மார்ட் ப்ளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, பின்புற ஏசி வென்ட், வயர்லெஸ் சார்ஜர், சுசூகி கனெக்ட் போன்ற பிற அம்சங்களைக் கொண்டுள்ளது.