ETV Bharat / technology

விண்ணில் பாய்ந்த சில விநாடிகளில் கோரம்! வானில் வெடித்து சிதறிய ஜப்பான் பிரைவேட் ராக்கெட்! எப்படி நடந்தது? - Japan Kairos rocket explodes

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 11:56 AM IST

Updated : Apr 11, 2024, 4:02 PM IST

Japan Kairos rocket explode: ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் ஏவப்பட்ட சில விநாடிகளில் வெடித்து சிதறியது.

Etv Bharat
Etv Bharat

டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் ஒன், விண்ணில் செலுத்திய ராக்கெட் ஏவப்பட்ட நில விநாடிகளில் வெடித்து சிதறியது. மத்திய ஜப்பானின் வக்கயமா மாகாணத்தில் ஸ்பேஸ் ஒன் என்ற விண்வளி ஆராய்ச்சி ஸ்டார்ட் அப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்த ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தியது. கிளம்பிய சில விநாடிகளில் ராக்கெட் வானில் வெடித்து சிதறியது. ராக்கெட் வெடித்து சிதறிய கரும்புகை வெளியேறியும், தண்ணீர் பீய்ச்சி அடித்து நெருப்பை அணைக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே பலமுறை இந்த ராக்கெட் ஏவுவதற்கு திட்டமிடப்பட்ட போதும் அவை தள்ளிப்போனது. கடைசியாக கடந்த சனிக்கிழமை ராக்கெட்டை விண்ணில் செலுத்த நிறுவனம் திட்டமிட்ட போதும் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக தள்ளிப்போனதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ராக்கெட் ஏவப்பட்ட சில விநாடிகளில் வானிலேயே வெடித்து சிதறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் யாருக்கேனும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

என்ன காரணத்திற்காக ராக்கெட் வெடித்து சிதறியது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருவதாக ராக்கெட் நிறுவனம் தெரிவித்து உள்ளது. அதேநேரம் இந்த ராக்கெட் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இருந்தால் உலகிலேயே சுற்று வட்டப்பாதையில் ராக்கெட்டை நிலை நிறுத்திய முதல் நிறுவனம் என்ற சிறப்பை ஸ்பேஸ் ஒன் பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஒன், ஜப்பான் பெரு நிறுவனங்களின் நிதி முதலீடுகளால் தொடர்ந்து இயங்கி வருகிறது. பிரபலமான Canon Electronics, IHI, Shimizu மற்றும் முக்கியr வங்கிகள் ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் மீது முதலீடுகளை செய்து உள்ளன.

இதையும் படிங்க : 46 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்! என்ன காரணம்?

Last Updated : Apr 11, 2024, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.