ETV Bharat / technology

iOS 18 உடன் வரும் ஆப்பிள் ஐபோன் 15: அமேசானில் 31,000 ரூபாய் தான்; எப்படி வாங்குவது? - Apple iPhone 15 Amazon Offer - APPLE IPHONE 15 AMAZON OFFER

ஆப்பிள் ஐபோன் 16 அறிமுகமானதைத் தொடர்ந்து பழைய மாடல் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் இந்தியா (Amazon India) போன்ற ஆன்லைன் வர்த்தகத் தளங்களின் பெரிய சலுகைகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில், தற்போது ஐஓஎஸ் 18 (iOS 18) உடன் வரும் ஐபோன் 15 (iPhone 15) மாடலை சுமார் ரூ.31,000 என்ற சலுகை விலையில் பயனர்கள் வாங்க முடியும்.

iphone 15 amazon offer banner
ஆப்பிள் ஐபோன் 15 தள்ளுபடி விலை (Credits: ETV Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 17, 2024, 1:24 PM IST

கடந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் 15 வெளியான பிறகு அமேசானில் பல்வேறு தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், புதிய ஐபோன் 16 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதும், பழைய ஐபோன் 15 போன்களுக்கு நல்ல சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஐஓஎஸ் 18 (iOS 18) ஆதரவுடன் கிடைக்கும் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை தற்போது பயனர்கள் சுமார் 31,000 ரூபாய்க்கு வாங்க முடியும். எனவே, சலுகைகளைப் பயன்படுத்தி அமேசான் இந்தியா ஷாப்பிங் (Amazon India shopping) தளத்தில் ஐபோன் 15 மாடலை எப்படி வாங்குவது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 15 அமேசான் ஆஃபர் (Apple iPhone 15 Amazon Offer):

ஆப்பிள் ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போனின் கருப்பு நிற 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை அமேசானில் ரூ.79,600 என பட்டியலிடப்பட்டுள்ளது. ஷாப்பிங் தளத்தின் 12% விழுக்காடு தள்ளுபடியுடன், ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,900ஆக அமேசான் இந்தியாவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நல்ல நிலையில் இருக்கும் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் வாயிலாக கூடுதலாக ரூ.35,050 வரை சேமிக்கலாம்.

இதையும் படிங்க: ஜிபிஎஸ் முதல் AI வரை: கால்பந்து அனுபவத்தை வேற லெவலாக்கும் புதுமையான டெக்னாலஜிகள்!

இப்படியாக ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் விலையை ரூ.34,850 ஆகக் குறைக்கலாம். கூடுதலாக, அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு (Amazon Pay ICICI Bank Credit Card) வைத்திருப்பவர்களுக்கு ரூ.3,495 வரையிலான கேஷ்பேக் தள்ளுபடி கிடைக்கிறது. இதன் வாயிலாக ஐபோனை ரூ.31,355 என்ற விலைக்கு வாங்க வாய்ப்பிருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 15 அம்சங்கள் (Apple iPhone 15 Specifications):

  1. காட்சி மற்றும் வடிவமைப்பு: ஐபோன் 15 ஆனது 6.1-அங்குல (inch) OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு ஆகிய ஐந்து வண்ண விருப்பங்களில் வாங்கக் கிடைக்கிறது. இந்த போனின் வடிவமைப்பைப் பொருத்தவரை, ஆப்பிள் தனது முந்தைய மாடலான ஐபோன் 14 வகையிலிருந்த வடிவமைப்பைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனால் ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் நல்ல வரவேற்பைப் பெற்ற பாரம்பரிய நாட்ச்க்கு பதிலாக, டைனமிக் ஐலேண்ட் நாட்ச் (Dynamic Island Notch) டிஸ்ப்ளே ஐபோன் 15 அடிப்படை மாடல்களில் இருந்தே அறிமுகப்படுத்தப்பட்டது.
  2. கேமரா: ஐபோன் 15 மாடலில் 48-மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இதே பழைய மாடலுடன் ஒப்பிடும்போது பகல் வெளிச்சம், குறைந்த-ஒளி, போர்ட்ரெய்ட் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைப் பெற்றுள்ளது.
  3. பேட்டரி: ஆப்பிள் ஐபோன் 15 போனில் 3,349 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட கூடுதல் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்கிறது.
  4. சிப்செட்: ஐபோன் 15 ஸ்மார்ட்போனில் ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக ஏ16 பயோனிக் (A16 Bionic) சிப் நிறுவப்பட்டுள்ளது. இது ஐபோன் 14 (iPhone 14) மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) போன்களில் பயன்படுத்தப்படும் ஏ15 பயோனிக் சிப்பில் இருந்து மேம்படுத்தப்பட்டது ஆகும். இதில் புதிய ஐஓஎஸ் 18 இயங்குதளத்தை அப்டேட் வாயிலாக நாம் பெறமுடியும்.
  5. சார்ஜிங்: குறிப்பிட்டு சொல்லும் வகையில், ஐபோன் 15 ஸ்மார்ட்போனில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பழைய லைட்னிங் போர்ட்டுக்குப் பதிலாக யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) ஆதரவை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 ஸ்மார்ட்போனில் இருந்து அறிமுகம் செய்தது. இது முந்தைய லைட்னிங் போர்ட்டை விட வேகமாக செயல்படும் என ஆப்பிள் கூறுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.