ஹைதராபாத்: சர்வதேச பைக் மார்க்கட்டில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, அடுத்தகட்ட செயல்பாட்டுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளது, பிரிட்டன் நாட்டின் பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான பிஎஸ்ஏ மோட்டார்சைகிள்ஸ் (BSA Motorcycles). அதன் வெளிப்பாடாக, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 (BSA Goldstar 650) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் இப்போது இந்திய பைக் மார்க்கட்டில் நுழைந்துள்ளது பிஎஸ்ஏ நிறுவனம். மேலும், இந்த பிஎஸ்ஏ கோல்ட் ஸ்டார் 650 பைக், ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா குழுமத்திற்கு சொந்தமான, கிளாசிக் லெஜெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பிஎஸ்ஏ பைக்குகளை இந்தியாவில் தயாரித்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய பைக் மார்க்கட்டில் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்குகள் விற்பனையில் உள்ளது. ரெட்ரோ பைக்குகளின் அனுபவத்தை விரும்புவோருக்காக தற்போது இந்திய பைக் மார்க்கேட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த கோல்டு ஸ்டார் 650.
ரெட்ரோ தீமில் மாடர்ன் பியூச்சர்ஸ்: பழைய காலத்தில் இருக்கும் பைக்குகளை போலவே பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கின் வடிவமைப்பு காட்சியளிக்கிறது. வட்ட வடிவிலான ஹெட்லாம்ப் மற்றும் கண்ணாடிகள், பெரிய பியூவல் டேங்க், நீளமான டயர்கள் என முற்றிலுமாக ரெட்ரோ தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய கால மோட்டார்சைக்கிள் போல் வடிவமைக்கப்பட்டாலும்கூட, ட்வின் பாட் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்டியுமெண்ட் (Twin pod semi digital instrument), யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் (USB charging port), எல்சிடி மல்டி-ஃபங்க்ஸ்னல் டிஸ்ப்ளே (LCD Multi-Functional Display) கொண்ட தனிப்பட்ட அனலாக் ஸ்பீடோமீட்டர் (Analogue Speedometer) மற்றும் டேகோமீட்டர் யூனிட்கள் (Tachometer Units) போன்ற மாடர்ன் பியூச்சர்களுக்கும் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 பைக்கில் பஞ்சமில்லை.
என்ஜின்:
- என்ஜின் வகை - லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், DOHC, 4 வால்வுகள், ட்வின் ஸ்பார்க் பிளக்குகள்
- எஞ்சின் திறன் - 652cc
- கம்பர்சன் ரேசியோ - 11.5:1
- டார்க் - 55Nm/4000rpm
- பவர் - 45hp/6500rpm
- கியர் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்
- கூலிங் சிஸ்ட்டம் - லிக்வீட்
சக்கரங்கள் மற்றும் டயர் அமைப்பு:
- முன் டயர் - 100/90-18 பைரெல்லி பாண்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப்
- முன் சக்கரம் - 36 வயர் ஸ்போக் அலாய், 18 x 2.5 இன்ச் ரிம்
- பின்புற டயர் - 150/70-R17 பைரெல்லி பாண்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப்
- பின் சக்கரம் - 36 வயர் ஸ்போக் அலாய், 17 x 4.25 இன்ச் ரிம்
சஸ்பென்ஷன்:
- முன்புறம் - 41மிமீ டெலஸ்கோப்பிக் போர்க்ஸ்
- பின்புறம் - 5 ஸ்டெப் அஜஸ்டபில் பிரிலோடுடன் கூடிய ட்வின் ஷாக் அப்சாபர்ஸ்
டைமன்சன்:
- வீல்பேஸ் - 1,425 மிமீ
- இருக்கை உயரம் - 780 மிமீ
- ரேக் - 26.5 டிகிரி
- வாகனத்தின் எடை - 201 கிலோ
பிரேக்:
- முன் பக்கம் - சிங்கில் 320மிமீ ஃப்லோட்டிங் டிஸ்க், பிரெம்போ ட்வின்-பிஸ்டன் ஃப்லோட்டிங் காலிபர், ABS
- பின் பக்கம் - சிங்கில் 255 மிமீ டிஸ்க், பிரெம்போ சிங்கில்-பிஸ்டன் ஃப்லோட்டிங் காலிபர், ABS
பியூவல் டேங்க்:
- மொத்த கொள்ளளவு - 12 லிட்டர்
- பியூவல் கன்ஸம்சன் – 70.6 mpg (WMTC) / 4.001L/100 km
நிறங்கள் மற்றும் விலை:
- இன்சிக்னியா ரெட் (Insignia Red) ரூ 2.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- டான் சில்வர் (Dawn Silver) ரூ 3.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- மிட்நைட் பிளாக் (Midnight Black) ரூ 3.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- ஹைலேண்ட் க்ரீன் (Highland Green) ரூ 2.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- ஷேடோ பிளாக் (Shadow Black) ரூ 3.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- சில்வர் ஷீன் (Silver Sheen - Legacy Edition) இந்த மாடலுக்கான விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கெத்தா சொல்லுங்க இது நம்ம தமிழக தயாரிப்பு.. SVM Prana 2.0 ஸ்பெஷல் என்ன? முழு விவரம்!