ETV Bharat / technology

ஐபோன் 16 சீரிஸ் விற்பனை தொடக்கம்: காலை முதல் வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்! - IPHONE 16 SERIES Sale - IPHONE 16 SERIES SALE

iPhone 16 sale starts in India: ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை இன்று (செப்டம்பர் 20) தொடங்கியதையடுத்து, காலை முதல் வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருந்து புதிய ஆப்பிள் போனை வாங்கிச் செல்கின்றனர்.

iphone 16 sale starts today in india article thumbnail
ஐபோன் 16 சீரிஸ் விற்பனை இன்று தொடங்கியது. (Credits: ETV Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 20, 2024, 10:54 AM IST

டெக் சந்தையில் பல விதமான நேர்மறை மற்றும் எதிர்மறைக் கருத்துகளை எதிர்கொண்டுவரும் புதிய ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை (iPhone 16 Series sale) இன்று (செப்டம்பர் 20) இந்தியாவில் தொடங்கியது. இதனையடுத்து, காலைமுதல் ஐஓஎஸ் 18 இயங்குதளத்துடன் வரும் புதிய ஐபோன் 16 மாடல்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோர்களின் வெளியே வரிசையில் காத்திருக்கின்றனர். இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவுகிறது.

இந்த நேரத்தில் ஐபோன் 16 ஸ்மார்ட்போன்களின் விலை என்ன, ஆப்பிள் வழங்கும் டிரேட்-இன் (Trade-in) சலுகைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவோம். புதிய ஐபோனை ஆப்பிள் ஸ்டோர்கள், அப்டிரோனிக்ஸ் (APTRONIX) போன்ற அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற பிற மல்டி பிராண்டட் ஸ்டோர்கள், ஆப்பிள் இந்தியா இணையதளம் போன்ற இடங்களில் இருந்து வாங்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இந்திய விலை (Apple iPhone 16 series price in India):

கீழ் அமைக்கப்பட்டிருக்கும் அட்டைவணையில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் மற்றும் ரகங்களின் விலை விவரிக்கப்பட்டுள்ளது.

மாடல்ஸ்டோரேஜ்விலைவங்கி சலுகைசலுகை விலை
ஆப்பிள் ஐபோன் 16128ஜிபிரூ.79,900ரூ.5,000ரூ.74,900
256ஜிபிரூ.89,900ரூ.5,000ரூ.84,900
ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ்128ஜிபிரூ.89,900ரூ.5,000ரூ.84,900
256ஜிபிரூ.99,900ரூ.5,000ரூ.94,900
512ஜிபிரூ.1,19,900ரூ.5,000ரூ.1,14,900
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ128ஜிபிரூ.1,19,900ரூ.5,000ரூ.1,14,900
256ஜிபிரூ.1,29,900ரூ.5,000ரூ.1,24,900
512ஜிபிரூ.1,49,900ரூ.5,000ரூ.1,44,900
1டிபிரூ.1,69,900ரூ.5,000ரூ.1,64,990
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்256ஜிபிரூ.1,44,990ரூ.5,000ரூ.1,39,900
512ஜிபிரூ.1,64,900ரூ.5,000ரூ.1,59,900
1டிபிரூ.1,84,900ரூ.5,000ரூ.1,79,900

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் ஆஃபர்கள் (Apple iPhone 16 series offers in India):

ஐபோன் 16 சீரிஸ் மொபைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express), ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ ஆகிய வங்கி அட்டைகள் பயன்படுத்தினால், ரூ.5000 வரை உடனடி கேஷ்பேக் கிடைக்கும். கூடுதலாக, பெரும்பாலான முன்னணி வங்கிகள் 3 முதல் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா சுலப மாதத் தவணை (EMI) விருப்பங்களை வழங்குகிறது.

இதையும் படிங்க

  1. ஜியோ AirFiber ரீசார்ஜ் இலவசம்: தீபாவளி சலுகையை வெளியிட்ட ரிலையன்ஸ் டிஜிட்டல்! - Jio AirFiber Diwali Offer
  2. கடுப்பான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள்: சலுகையில் மோட்டோ ஜி85 போன்... ஆர்டர்களை ரத்துசெய்த நிறுவனம்! - Flipkart Scam
  3. செயலிழந்த ஜிமெயில் அக்கவுண்ட்: செப்.20 தான் கடைசி நாள்... உடனடியா இத பண்ணா; உங்க கூகுள் கணக்க காப்பாத்தலாம்! - Stop Google Account from Deleting
  4. ஜிபிஎஸ் முதல் AI வரை: கால்பந்து அனுபவத்தை வேற லெவலாக்கும் புதுமையான டெக்னாலஜிகள்! - TECHNOLOGY USED IN FOOTBALL

ஆப்பிள் டிரேட்-இன் திட்டம்:

ஆப்பிள் புதிய ஐபோன் 16 ஸ்மார்ட்போன்களுக்கு தங்களின் பிரத்யேக டிரேட்-இன் திட்டத்தை அனுமதிக்கிறது. இதில், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது, ரூ.4000 முதல் ரூ.67,500 வரை தள்ளுபடி பெறலாம். புதிய ஐபோன் 16 சீரிஸ் போன்களை வாங்குவதற்கு இந்த தள்ளுபடியை நேரடியாகப் பயன்படுத்தலாம்.

பிற சலுகைகள்:

ஐபோன் 16 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் ஆர்கேட் ஆகியவை இலவசமாக கிடைக்கும். இது ஆப்பிள் பயனர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு தொகுப்பை வழங்குகிறது.

இன்று காலையில் போன் வாங்கிய பல வாடிக்கையாளர்களும் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) வாங்கிய சூரத்தைச் சேர்ந்த அக்‌ஷை என்பவர், "நான் காலை 6 மணிக்கு வந்தேன். ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வாங்கியுள்ளேன். எனக்கு புதிய ஐஓஎஸ் 18 (iOS 18) பிடித்திருக்கிறது. கேமராவின் ஜூம் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.