ETV Bharat / technology

பிரேசிலில் “X” தளம் முடக்கப்பட காரணம் என்ன? அரசியலும், எலான் நடவடிக்கையும்! - Brazil court suspended X platform - BRAZIL COURT SUSPENDED X PLATFORM

Brazil Court Suspended X Platform: X தளம் பிரேசில் நீதிமன்றம் கூறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால், பிரேசிலில் X தளம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தெரிவித்துள்ளார்.

கோப்புப் படம்
கோப்புப் படம் (Credits- IANS Official Website)
author img

By PTI

Published : Aug 31, 2024, 6:49 PM IST

(சாவ் பாலோ) பிரேசில்: பிரேசிலில் எலான் மஸ்க்கின் சமூக ஊடக நிறுவனமான X நிறுவனத்தை இடைநீக்கம் செய்ய பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு காரணம், பிரேசில் ஒரு பொறுப்பு X பிரதிநிதியை நிர்ணயிக்கக் கூறிய நிலையில், அதை எலான் மஸ்க் மறுத்ததால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தி அசோசியேட்டட் பிரஸ் (The Associated Press) செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பல மாதங்களாக பிரேசில் நீதிமன்றம் X தளத்தின் செயல்பாடுகள் குறித்து பல குற்றச்சாட்டுகள் வைத்திருந்த நிலையில், அது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில் பிரேசில் நீதித்துறை, X தளம் பேச்சுரிமை மற்றும் பாதுக்காப்பற்ற தன்மையுடன் இருப்பதாகவும், தீவிர வலதுசாரி கணக்குகள் பரப்பும் தவறான தகவல்களால் நாட்டில் ஏற்படும் பகைமைச் சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் கூறி, பிரேசிலில் ஒரு X தளத்தின் செயல்பாடுகளுக்கான பிரநிதியை நிர்ணயிக்க கால அவகாசம் கொடுத்தது.

ஆனால், அந்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையிலும், X தளம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், X தளத்திற்கு பிரேசில் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு முதல் பிரேசிலில் X தளம் முடக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த நாள் (வியாழன்கிழமை) X தனது அதிகாரப்பூர்வ உலகளாவிய அரசாங்க விவகாரங்கள் பக்கத்தில், “டி மோரேஸால் X-ஐ பிரேசிலில் முடக்குவார் என எதிர்பார்க்கப்பட்டதுதான். X தளம், அவரது அரசியல் எதிரிகளை தகர்த்தெரியக் கூறும் சட்டவிரோத உத்தரவுகளுக்கு எப்போதும் இணங்காது.

மேலும், நாங்கள் பிரேசில் நீதிமன்றத்தில் தற்காத்துக் கொள்ள முயன்றபோது, ​​நீதிபதி டி மோரேஸ் எங்கள் முன்னாள் பிரேசிலிய சட்டப் பிரதிநிதியை சிறையில் அடைப்பதாக அச்சுறுத்தினார். அவர் ராஜினாமா செய்த பிறகும், அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தையும் முடக்கி உள்ளனர்.

​​நீதிபதி டி மோரேஸ் பிரேசில் நாட்டிற்கு பல சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவருடன் இருக்கும் அனைத்து பெடரல் நீதிபதிகளும் அவரது சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க வழி இல்லாமல் பயந்து உடன் இருக்கிறார்கள். X தளம் வெளிப்படையாக கூறுவதாவது, பயனர்களின் கணக்குகளை குற்றச்சாட்டுடன் கூறினால் முடக்க தயார். ஆனால் பிரேசில் உச்ச பெடரல் நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் அரசியல் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் வலதுசாரி கட்சியுடன் இருக்கும் அனைத்து கணக்குகளையும் முடக்கக் கூறினால் அவற்றை X தளம் ஏற்க முடியாது” என பதிவிட்டிருந்தது.

எலான் அரசியல் கருத்துகளுக்கு பதில் கொடுப்பதில் இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன் X தளத்தில் டி மோரேஸை எலான் அடிக்கடி அவமதித்துள்ளார். அவரை ஒரு சர்வாதிகாரி மற்றும் கொடுங்கோலன் என்று எலான் கூறியுள்ளார். ஆனால், அந்த பதிவுகளுக்கு மோரேஸின் பாதுகாவலர்கள், மோரேஸின் செயல்பாடுகள் சட்டப்பூர்வமானவைதான், நாட்டின் பல முடிவுகளில் ஜனநாயகம் பாதிக்கப்படும் நேரத்தில், ஜனநாயகத்தைப் பாதுகாக்க உதவுபவர் என கூறியுள்ளனர்.

எனவே, மோரேஸின் தரப்பில் இருந்து X தளம் முடக்கப்பட பிரேசில் இயக்கிய புதிய சட்டம் காரணமாகும் எனத் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இயற்றப்பட்ட பிரேசிலியச் சட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிரேசிலில் ஒரு பிரதிநிதி இருக்க வேண்டும், அப்போதுதான் அந்த நிறுவனத்திற்கு எதிராக பிரேசிலில் இருக்கும் சட்ட வழக்குகள் குறித்து மூல நிறுவனம் அறிய முடியும், நடவடிக்கையும் எடுக்க முடியும் என்பதாகும்.

மேலும், மோரேஸின் உத்தரவுக்கு இணங்க ஆபரேட்டர்கள் தகவல் பெற்ற 12 மணி நேரத்திற்குள் X தளம் ஆஃப்லைன் செய்யப்பட்டுவிட்டது என ரியோ டி ஜெனிரோவில் உள்ள கெட்லியோ வர்காஸ் தொழில்நுட்பம் மற்றும் சமூக மையத்தின் நிர்வாகி லூகா பெல்லி கூறியுள்ளார்.

இதனால் யாருக்கு பாதகம் என பார்த்தால், கடந்த 2022ஆம் ஆண்டில் எலான் ட்விட்டரை வாங்கியதில் இருந்து விளம்பரதாரர்களின் இழப்புடன் போராடி வருகிற்து X தளம். அந்த இழப்பிற்கு ஈடுகட்டும் விதத்தில், பிரேசில் X தளத்தின் முக்கியமான பொருளாதார சந்தைப்படுத்தும் நாடாக இருந்தது எனலாம். சந்தை ஆராய்ச்சி குழு எமர்கெட்டர் (Emarketer) கணிப்பு படி, பிரேசிலில் சுமார் 40 மில்லியன் மக்கள் X தளத்தை பயன்படுத்துகிறார்கள். அதாவது, மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது X-ஐ பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அற்புதமாக காட்சியளித்த சூப்பர் ப்ளூ மூன்.. நாசாவை டேக் செய்த எலான் மஸ்க்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.