ஹைதராபாத்: தற்போது பலரும் நல்ல கேமரா வசதி, டிஸ்பிளே, சிப்செட்,பேட்டரி லைப் உள்ள ஸ்மார்ட்போன்களை விரும்புகிறார்கள். அந்த வகையில், டெக் உலகை குஷிப்படுத்தும் விதமாக மாதந்தோறும் குறைந்தது 2 முதல் 4 மாடல்களிலாவது புதிய போன்கள் சந்தையில் விற்பனைக்கு களமிறங்குகிறது. இதன் காரணமாக, புதிய போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எந்த போனை தேர்ந்தெடுப்பது என்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படுகிறது.
வாடிக்கையாளர்களின் இந்த குழப்பத்தை போக்கும் வகையில், ரூ.15,000க்கு குறைவான சிறந்த கேமரா, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட சிறப்பான ஸ்மார்ட்போன்கள் என்னென்ன? அவற்றின் முழுமையான விவரங்கள் என்ன? என்பதை பின்வருவனவற்றில் காணலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி: தென்கொரிய நிறுவனமான சாம்சங், உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் 'M' சீரிஸ் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) என்ற ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த போன், 6.5 இன்ச் ஃபுல் HD AMOLED டிஸ்பிளே, Exynos 1280 சிப்செட், 6GB RAM + 128GB ஸ்டோரேஜ், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது. பிரதான கேமராவுடன் கூடிய மூன்று கேமராக்கள் மற்றும் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா, 6,000mAh பேட்டரி, 25 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் போன்ற சிறப்பம்சங்களுடன், மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,888 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி நோட் 13 5ஜி: ரெட்மியின் நோட் சீரிஸ் மொபைலுக்கு என தனி மார்க்கெட் மற்றும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் சியோமி நிறுவனம் இந்த சீரிஸில் குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை அளித்து வருவதே ஆகும். அந்த வகையில், ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த போன், 6.67 இன்ச் 120 Hz, 3D Curved AMOLED மற்றும் 1.5 K ரெசோலேசன் கொண்ட ஃபிங்கர்பிண்ட் டிஸ்பிளே; 7,200 மீடியாடெக் டைமன்சிட்டி (Mediatek Dimensity), TSMS 4nm செயல்முறை கொண்ட சிப்செட்; 6 சப்போர்ட் Wifi மற்றும் டூயல் 5G அமைப்பைக் கொண்ட கனக்டிவிட்டி; 6GB RAM + 128GB ஸ்டோரேஜ், 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது.
மேலும், 5,000 mAh பேட்டரி, 19 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஆகும் 120 வாட்ஸ் ஹைப்பர்சார்ஜிங் சப்போர்ட்; லாஸ்லெஸ் 4x சென்சார் ஜூம், OIS+EIS, ALD கோட்டிங், புதிய ஃபில்டர்கள், லார்ஜ் அபெர்ச்சர் f/1.65 ஆகிய வசதிகளைக் கொண்ட கோமரா; டால்பி விஷன் அட்மோஸ் (Dolby Vision Atmos) போன்ற போன்ற சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,905 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா ஜி64 5ஜி: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மோட்டோரோலா மொபிலிட்டி, சீன நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில், மோட்டோரோலா 'G' சீரிஸ் வரிசையில், மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
இந்த போன், 6.5 இன்ச் ஃபுள் HD+ LCD டிஸ்பிளே; மீடியாடெக் டிமான்சிட்டி 7025 சிப்செட்; 6,000mAh பேட்டரி; 8 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் வெளிவந்துள்ள இந்த போன், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் கொண்டுள்ளது. மேலும், மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் வழங்கப்படும் என மோட்டோ தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாது, பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ள பிரதான கேமரா உட்பட இரண்டு கேமராக்கள் மற்றும் 16 மெகாபிக்சல் கொண்டுள்ள முன்பக்க கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளது. 5ஜி நெட்வொர்க்குடன் கூடிய மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது. மேலும், 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆஃப்-ரோடு ரைடர்களுக்கான மஹிந்திராவின் புதிய படைப்பு.. Mahindra Thar ROXX ஸ்பெஷல் என்ன? முழு விவரம்!