ETV Bharat / technology

ஹோண்டா CB300F: இந்தியாவின் முதல் 300சிசி ஃப்ளெக்ஸ்-பியூல் பைக்! இதுல அப்படி என்ன சிறப்பு?

ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா தங்களின் முதல் 300சிசி CB300F ஃப்ளெக்ஸ்-பியூல் (CB300F Flex-Fuel) பைக்கை அறிமுகம் செய்துள்ளது. பிற 300சிசி இருசக்கர வாகனங்களில் இல்லாத ஒரு சிறப்பம்சம் இந்த பைக்கில் இருக்கிறது.

Honda Motorcycle launches first CB300F Flex-Fuel 300cc bike in india
இந்தியாவின் முதல் 300சிசி ஹோண்டா CB300F ஃப்ளெக்ஸ்-பியூல் பைக் அறிமுகம். (Honda BigWing India)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 21, 2024, 3:54 PM IST

ஹோண்டா CB300F ஃப்ளெக்ஸ்-பியூல் பைக் இந்தியாவில் அறிமுகமாகி பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. 300சிசி வகைகளில் இந்திய சாலைகளை அலங்கரித்து வரும் பைக்குகளில் இது சற்று வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள எத்தனால் இசைவு எஞ்சின் தான்.

இதில் E85 தரத்திலான எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கு வழிவகுக்கும் வகையில், இந்தியாவின் முதல் 300சிசி CB300F ஃப்ளெக்ஸ்-ஃபியூல் (CB300F Flex-Fuel) பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள ஹோண்டா பிக்விங் (Honda BigWing) டீலர்ஷிப் கடைகளில் புதிய ஹோண்டா CB300F ஃப்ளெக்ஸ்-ஃபியூல் பைக்கை முன்பதிவு செய்யலாம். இதன் டெல்லி எக்ஸ்-ஷோரும் விலை ரூ.1,70,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2050ஆம் ஆண்டுக்குள் தங்களின் தயாரிப்புகளில் கார்பன் உமிழ்வைக் குறைப்பது தான் லட்சியம் எனவும், இந்திய அரசின் எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தை நிறுவனம் தொடர்ந்து ஆதரிக்கும் எனவும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் சுட்சுமு ஓட்டானி இந்த பைக் அறிமுக நிகழ்வில் தெரிவித்தார்.

சிறப்பம்சங்கள்:

Honda CB300F Flex-Fuel 300cc bike Mat Axis Grey Metallic color
ஹோண்டா CB300F ஃப்ளெக்ஸ்-பியூல் பைக் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் நிறம் (Honda BigWing India)
  • E85 எரிபொருளுக்கு இணக்கமான பைக் (85% எத்தனால் & 15% பெட்ரோல்)
  • சக்திவாய்ந்த 293.52cc, ஆயில்-கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் PGM-FI எஞ்சின்
  • 18.3 கிலோவாட் சக்தி மற்றும் 25.9 நியூட்டன் மீட்டர் (Nm) டார்க்
  • 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்
  • அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச்
  • இரட்டை சேனல் ஏபிஎஸ் (ABS) உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள்
  • ஹோண்டாவின் தேர்ந்தெடுக்கக்கூடிய டார்க் கட்டுப்பாடு (HSTC)
  • தங்க நிற தலைகீழான (USD) முன்பக்க ஃபோர்க்குகள்
  • 5 அளவுகளில் சரிசெய்யக்கூடிய பின்புற மோனோ ஷாக் சஸ்பென்ஷன்
  • முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்
  • எத்தனால் மீட்டர்
இதையும் படிங்க
  1. பைக் பழசானா என்ன! இன்னும் 10 வருஷம் புதுசு மாதிரி ஓட வைக்கலாம்!
  2. வரப்போகுது முதல் ஹைட்ரஜன் ரயில்; பெட்டிகளைத் தயாரிக்கும் சென்னை ஐசிஎஃப்: ஜெர்மனி, சீனாவுக்கு அடுத்து இந்தியா!
  3. விலை குறையும் மின்சார வாகனங்கள்! சுமார் 10 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு!

புதிய ஹோண்டா CB300F E85 பைக்கில் மேம்பட்ட முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 5 நிலைகளில் தானாக மாறும் ஆட்டோமேட்டிக் பிரைட்னஸ் அம்சத்துடன் வருகிறது. இதில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டேகோமீட்டர், எரிபொருள் அளவு, ட்வின் ட்ரிப் மீட்டர்கள், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் கடிகாரம் போன்ற தகவல்கள் அடங்கியிருக்கிறது.

Honda CB300F Flex-Fuel 300cc bike sports red color
ஹோண்டா CB300F ஃப்ளெக்ஸ்-பியூல் பைக் ஸ்போர்ட்ஸ் ரெட் நிறம். (Honda BigWing India)

நாம் டேங்கில் நிரப்பும் பெட்ரோலில் எத்தனால் அளவு 85 விழுக்காட்டிற்கு மேல் இருந்தால், அதனை குறிக்கும் ஒரு லைட்டும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் இணைக்கப்பட்டுள்ளது. முகப்பு விளக்கு, இண்டிகேட்டர்கள் என அனைத்தும் எல்இடி விளக்குகளால் மெருகேற்றப்பட்டுள்ளது. ஸ்போர்ஸ் ரெட், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த பைக் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்திய அரசு கார்பன் உமிழ்வை குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு உகந்த வாகனங்களை ஹோண்டா அறிமுகம் செய்திருப்பது பிற நிறுவனங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

etv bharat tamil nadu whatsapp channel link and QR Code
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.