கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி, மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்விஃப்ட் சிஎன்ஜி (Swift CNG) காரை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.19 லட்சம் ஆகும்.
மொத்தம் மூன்று வகைகளில் புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி 2024 (Maruti Suzuki Swift CNG 2024) கார் இந்திய சாலைகளில் பயணிக்கத் தயார் நிலையில் உள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி முதல் இந்த கார் வழங்கப்படுகிறது.
உள்புற மற்றும் வெளிப்புறத் தோற்றம்:
புதிய ஸ்விஃப்ட் CNG காரின், வடிவமைப்பு, அம்சங்களைப் பார்க்கும்போது, பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் உள்ளது. எல்இடி மூடுபனி விளக்குகள் (LED Fog lamp), எல்இடி புரொஜெக்டர் முகப்பு விளக்குகள் (LED projector headlamps), எல்இடி டெயில்லைட்கள், 15 இன்ச் அலாய் வீல்கள், ஒன்பது அங்குல தொடுதிரை (9" Touchscreen) அமைப்பு, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் OTA மேம்படுத்தல்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகப் பார்க்கலாம்.
எஞ்சின் திறன்:
இதில், மூன்று சிலிண்டர்கள் அடங்கிய 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சினை பெட்ரோலில் இயக்கும்போது, 80 bhp சக்தியையும், 112 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும்.
அதுவே சிஎன்ஜி-யில் இயக்கும்போது, 69 bhp சக்தியையும், 102 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 5- ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதான் ஒரேத் தேர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் வகைகளின் விலைப் பட்டியல் (New Maruti Swift CNG car models price in India):
மூன்று வகைகளில் வரும் ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வகை | விலை (எக்ஸ்-ஷோரூம்) |
ஸ்விஃப்ட் சிஎன்ஜி VXi 2024 | ரூ.8.19 லட்சம் |
ஸ்விஃப்ட் சிஎன்ஜி VXi (O) 2024 | ரூ.8.46 லட்சம் |
ஸ்விஃப்ட் சிஎன்ஜி ZXI | ரூ.9.19 லட்சம் |
என்ன மைலேஜ் கிடைக்கும்? (Swift CNG Mileage)
சிஎன்ஜி-யில் வாகனத்தை இயக்கும்போது, கிலோவுக்கு 32.85 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இது பழைய மாடல் ஸ்விஃப்ட் காரை விட 6% அதிகமாகும். இது மாருதி சுசூகி நிறுவனத்தின் 14-ஆவது சிஎன்ஜி மாடல் ஆகும்.
Maruti Suzuki S-CNG goes above and beyond when it comes to safety. Take, for instance, the Micro Switch. It ensures that the engine won’t start while refueling so that you #RunOnWhatYouLove#RunOnSafety #RunOnSCNG #Arena #Brezza #SCNG #CNGCars #CNG pic.twitter.com/vQFFgUAeiS
— Maruti Suzuki (@Maruti_Corp) September 21, 2024
இதையும் படிங்க:
- சந்திரயான் திட்டம்: நிலவில் 160 அடி அகலம் உள்ள பள்ளம் கண்டுபிடிப்பு! - PRAGYAN ROVER FOUND WIDE CRATER
- இவர்கிட்ட மட்டும் தான் இது இருக்கு! முகேஷ் அம்பானி வாங்கிய விலை உயர்ந்த போயிங் விமானம்! - Mukesh Ambani new Private Jet
- பிளிப்கார்ட்டில் ஆஃபர் மழை: 5ஜி மொபைல் போன் எங்கக்கிட்ட தான் கம்மி; அமேசானுக்கு கடும் நெருக்கடி! - Flipkart offers on mobiles