அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் சலுகைகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நிறுவனத்தின் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் செப்டம்பர் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தற்போது கிக்-ஸ்டார்டர் டீல்ஸ் (Kickstarter deals) எனும் சலுகையை பயனர்களுக்காக அறிவித்துள்ளது.
இந்த சூழலில் அமேசான் இந்தியா வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ், சாம்சங், சியோமி, ஐக்யூ போன்ற பிராண்டுகளின் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கலாம்.
Get ready for the biggest festive shopping spree! The Amazon Great Indian Festival kicks off on 27th September with deals you simply can’t miss. Excited? Hit the link in bio to know more!#AmazonGreatIndianFestival2024 #AGIF #TaiyaariKaTyohaar pic.twitter.com/CC54WFHfQy
— Amazon India (@amazonIN) September 20, 2024
அமேசான் கிக்-ஸ்டார்டர் மொபைல் ஆஃபர்கள் (பிரீமியம் முதல் பட்ஜெட் வரை):
- Xiaomi 14: பிரீமியம் சியோமி 14 மொபைலை ரூ.47,999-க்கு வாங்கலாம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் அடங்கிய லைக்காவுடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட டிரிபிள் கேமரா அமைப்பு, 1.5K 120Hz அமோலெட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.
- Samsung Galaxy S21 FE: இந்த சாம்சங் போனில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 12 மெகாபிக்சல் வைட் ஆங்கிள், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் பின்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் சந்தையில் கிடைக்கும் சிறந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 FE ஸ்மார்ட்போனை ரூ.25,749 எனும் சலுகை விலையில் வாங்கலாம்.
- OnePlus 11R 5G: குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 (Qualcomm Snapdragon 8+ Gen 1) சிப்செட் உடன் இயங்கும் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி போன் ரூ.26,749-க்கு கிடைக்கிறது. 100W சூப்பர் வூக் (SuperVooc) சார்ஜிங், 120Hz ஃப்ளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே போன்ற இதன் சிறப்பம்சங்களாக உள்ளன.
- iQOO Z7 Pro 5G: ஐக்யூ இசட்7 ப்ரோ 5ஜி மொபைலை ரூ.19,749-க்கு வாங்கலாம். இது 3டி வளைந்த 120Hz அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி (Mediatek Dimensity) 7200 5ஜி சிப்செட்டுடன் வருகிறது.
- OnePlus Nord CE 3 5G: ஒன்பிளஸ் நார்டு CE 3 5ஜி மொபைலை ரூ.16,749 என்ற விலையில் வாங்கலாம். 12ஜிபி ரேம், 5,000mAh பேட்டரி, 80W சூப்பர் வூக் சார்ஜிங், 50 மெகாபிக்சல் சோனி IMX890 போன்ற அம்சங்களுடன் இந்த மொபைல் அமேசான் கிக்-ஸ்டார்டர் தள்ளுபடியில் விற்பனைக்கு இருக்கிறது.
- iQOO Z9 5G: வளைந்த 3டி திரைப் பிரிவில் கொண்டு வரப்பட்டுள்ள ஐக்யூ இசட்9 5ஜி மொபைலை இந்த அமேசான் சலுகை விற்பனையில் ரூ.15,999 எனும் குறைந்த விலையில் வாங்கலாம். 1,800 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், சோனி IMX882 கேமராவுடன் வரும் இந்த போன் 5ஜி விரும்பிகளின் சிறந்தத் தேர்வாக இருக்கும்.
- POCO X6 5G: சியோமின் கிளை நிறுவனமான போக்கோவிடம் இருந்து போக்கோ எக்ஸ்6 5ஜி ஸ்மார்ட்போன் சலுகை விலையில் கிடைக்கிறது. வங்கி சலுகைகள் உள்பட இந்த போனை ரூ.14,999 என்ற விலைக்கொடுத்து வாங்கலாம். இது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 1.5K 120Hz அமோலெட் (AMOLED) டிஸ்ப்ளே, 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் அடங்கிய டிரிபிள் ரியர் கேமரா போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
- Lava Blaze 3 5G: லாவா பிளேஸ் 3 5ஜி ஸ்மார்ட்போனை 9,899 ரூபாய்க்கு வங்கி சலுகைகளுடன் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். இது முதன்மை 50 மெகாபிக்சல் AI கேமரா, 90Hz ரெப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி டி6300 சிப்செட் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
- iQOO Z9 Lite 5G: ஐக்யூ இசட்9 லைட் 5ஜி மொபைலை வங்கிச் சலுகைகளுடன் ரூ.9,499-க்கு வாங்கலாம். கட்டணம் இல்லா சுலப மாதத் தவணை திட்ட (EMI) வசதியும் உள்ளது. இந்த போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 5ஜி சிப்செட், 50 மெகாபிக்சல் AI கேமரா, IP64 பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
- Redmi 13C 5G: ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனை 9,199 ரூபாய் எனும் மலிவு விலைக்கு வாங்கலாம். இந்த மொபைலில் 50 மெகாபிக்சல் அடங்கிய AI டூயல் கேமரா, 90Hz டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
- Realme Narzo N63: பெரிய 5000mAh பேட்டரி, 45W விரைவான சார்ஜிங் ஆதரவு கொண்ட ரியல்மி நார்சோ என்63 மொபைலை இந்த கிக்-ஸ்டார்டர் தள்ளுபடி நாள்களில் ரூ.7,155-க்கு வாங்க முடியும்.
இதையும் படிங்க|
- ஐபோன் 16 சீரிஸ் விற்பனை தொடக்கம்: காலை முதல் வரிசையில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்! - IPHONE 16 SERIES Sale
- ஜியோ AirFiber ரீசார்ஜ் இலவசம்: தீபாவளி சலுகையை வெளியிட்ட ரிலையன்ஸ் டிஜிட்டல்! - Jio AirFiber Diwali Offer
- ஜீரோ 40 5ஜி: IR ரிமோட், JBL ஸ்பீக்கர்ஸ், Folax அசிஸ்டன்ட் என பல அம்சங்கள்! - Infinix Zero 40 5G AI Phone