திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பட்டியலின இளைஞரை மாற்று சமூகத்தினர் கட்டையால் தாக்கியதில் படுகாயங்களுடன் இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கட்டையால் தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "சாலையோரம் இருந்த கல்லை இருவர் பிடிங்கினர் அதனை கேட்கச் சென்ற என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கடப்பாரை கொண்டு தாக்க வந்தனர். அப்போது நான் தற்காப்புக்காக அவர்களை தாக்கினேன். இதனால் இருவரும் அவர்களது உறவினர்களுடன் என்னை தாக்கினர். தற்போது நான் மருத்துவமமையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இருவரும் என்னை அடித்ததால் என் காது கேட்காமல் போய்விட்டது” என்று கூறினார்.
இதனையடுத்து, மாற்று சமூகத்தினை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், அவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இளைஞரை மாற்று சமூகத்தினர் ஒன்றுதிரண்டு கட்டையால் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இளைஞரை கட்டையால் தாக்கிய ஆனந்தனை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லையில் தனி ஆளாக கொடி ஏற்றிய மேயர்! விழாவை புறக்கணித்த கவுன்சிலர்கள்