ETV Bharat / state

வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்டவரின் வீட்டில் பாய்ந்த பெட்ரோல் குண்டு! - youth threw a petrol bomb at house - YOUTH THREW A PETROL BOMB AT HOUSE

Youth Threw a Petrol Bomb: சென்னை, போரூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டி கேட்டதால், ஆத்திரமடைந்த நபர் இன்று அதிகாலையில் இரு பெட்ரோல் குண்டுகளை தட்டிக்கேட்டவரின் வீட்டிற்கு வெளியே வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெட்ரோல் குண்டு புகைப்படம்
பெட்ரோல் குண்டு புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 10:25 PM IST

சென்னை: சென்னை, போரூர் அடுத்த காரம்பாக்கம், பொன்னி நகர் மரகதம்மாள் தெருவைச் சேர்ந்தவர் கவியரசு (25). இவரது தம்பி பாலாஜி (19). இவரது நண்பர் காரம்பாக்கம் அருணாச்சலம் முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (20). இதில் பாலாஜியும், முருகனும் நண்பர்கள். இவர்கள் இருவருமே ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டின் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் நேற்று மாலை பாலாஜி தனது வீட்டின் அருகே தனது நண்பரான முருகனுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதைப்பார்த்த பாலாஜியின் அண்ணன் கவியரசு இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது.

மேலும், பாலாஜியை கவியரசு மிகவும் கடுமையாக திட்டியும் உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் என் நண்பனை என் முன்னாலேயே திட்டுகிறாயா, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் இன்று அதிகாலை 3 மணி அளவில் கவியரசு வீட்டிற்கு வந்த முருகன் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீட்டுக்கு வெளியே வீசி விட்டு தப்பி ஓடி உள்ளார். இந்த சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த கவியரசு மற்றும் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயங்களை சேகரித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "அறுபது ரூபாயால வாழ்க்கையே போயிடுச்சி.. டாஸ்மாக் கடையை இழுத்து மூட வேண்டும்" - கதறும் கள்ளக்குறிச்சி பெண்கள்! - kallakurichi illicit liquor issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.