ETV Bharat / state

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்- தேதி வெளியீடு! - yoga and naturopathy application

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 7:40 PM IST

Yoga and Naturopathy course: யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 8ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் பூர்த்தி செய்பவர் (கோப்புப்படம்)
விண்ணப்பம் பூர்த்தி செய்பவர் (கோப்புப்படம்) (credit - Etv Bharat Tamil Nadu)

சென்னை: 2024-2025-ம் கல்வியாண்டில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "2024-2025-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு , அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பு சேர்க்கைக்கு ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 8ஆம் தேதி வரையில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பட்டபடிப்புக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பப்படிவங்கள் ஆணையரக அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த ஆயுஷ்முறை மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்படமாட்டாது.

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். மருத்துவப் பட்டப்படிப்பு பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) 5 ஆண்டுகள் 6 மாதம் ஆகும். 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரி, சுயநிதி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில், அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு ஜூலை 8ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை? - தமிழக பாஜக கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.