ETV Bharat / state

உலக சாக்லேட் தினம்.. குழந்தைப் பருவத்தை ருசித்துக் கொண்டே ரசிக்க நீங்கள் விரும்பும் சாக்லேட் எது? - WORLD CHOCOLATE DAY 2024 - WORLD CHOCOLATE DAY 2024

WORLD CHOCOLATE DAY : இன்று உலக சாக்லேட்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், நம் வாழ்வின் இனிய தருனங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் சாக்லேட்களின் உணர்ப்பூர்வ பந்தத்தை அதன் வரலாறு மற்றும் பண்புகள் வழி இந்த கட்டுரையில் காணலாம்.

சாக்லேட்கள் (கோப்புப்படம்)
சாக்லேட்கள் (கோப்புப்படம்) (CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 10:59 PM IST

Updated : Jul 7, 2024, 7:36 PM IST

சென்னை: பொதுவாக நம் வாழ்வில் நல்ல விஷயம் ஏதேனும் நடந்தால் சாக்லேட் கொடுத்து கொண்டாடுவோம். அவ்வாறு மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் சாக்லேட்களை கொண்டாடும் நாள் இன்று (ஜூலை 7). எனவே, நமது ஸ்டிரஸ் பஸ்டராக இருந்து அழும் குழந்தை முதல் மன அழுத்தமுள்ள பெரியவர்கள் வரை தனது சுவையால் கட்டிப்போடும் சாக்லேட்களின் வரலாறு, உருவாகும் முறை மற்றும் அவற்றின் நன்மை, தீமை குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

சாக்லேட்கள் என்னும் மேஜிக் பீன்: சாக்லேட் என்றால் நியாபகம் வருவது பிறந்தநாள் கொண்டாட்டமாக இருந்தாலும், அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய சாக்லேட்டின் சுவையும், அனுபவமும் மறக்க முடியாதவை. இந்த சாக்லேட் தினத்தை கொண்டாடும் நோக்கம் அனைவரின் குழந்தை பருவத்தையும், சாக்லேட்களின் இனிமையையும் போல் புத்துணர்ச்சியைப் பரவ என வைத்துக் கொள்ளலாம். சாக்லேட்களில் எத்தனை வகைகள்? வெள்ளை சாக்லேட், பால் கலந்த சாக்லேட், அடர் நிற சாக்லேட், இனிப்பு அடர் நிற சாக்லேட், மிதமான அடர் நிற சாக்லேட், கசப்பு-இனிப்பு சாக்லேட், இனிப்பில்லாத சாக்லேட் என ஒருவரின் மனநிலை, சுவை விருப்பத்திற்கேற்ப ஏழு கண்டங்களில் இருக்கும் மனிதர்களை கட்டிப்போடும் வித்தை கண்டது சாக்லெட்கள். இதனால் இதை "மேஜிக் பீன்" எனவும் அழைக்கிறார்.

சாக்லேட்டும் வரலாறும்: சாக்லேட்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலக்கட்டம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், சாக்லேட்கள் ஐரோப்பிய கண்டத்தில் 1550ஆம் ஆண்டில் ஜூலை 7ஆம் தேதி கொண்டுவரப்பட்டதாக வரலாறு கூறும் தகவலின் இந்நாள் சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது.

செய்முறையும் நறுமணமும்: கோகோ மரங்களில் இருந்து முதலில் பீன்ஸ்கள் பறிக்கப்டுகிறது. பின் அந்த பின்ஸில் இருக்கும் வெள்ளை நிறப் பகுதிகளை நீக்கி உலர வைக்கப்படுகிறது. இவ்வாறு நொதித்தல் முறையை செய்யும் போது சாக்லேட்கள் புளிப்பான சுவையைப் பெறுகின்றன. பின் உலர வைத்த பீன்ஸின் தொளிகளை நுனி முனியோடு உரித்து எடுக்கும்போது மணம் வாய்ந்த கோகோ பொருட்கள் கிடைக்கின்றன. பின் அவற்றை அரைத்து, வெண்ணெய் போன்ற பதத்தில் கொண்டு வந்து, அதில் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கப்படுகிறது. இந்த பொருட்களின் அளவுகளைக் கொண்டு பல வகையான சாக்லேட்கள் உருவாக்கப்படுகின்றன.

மனங்களை இணைக்கும் சாக்லேட்: இந்தியாவில் இனிப்புகளுக்கும், இன்ப நிகழ்ச்சிக்கும் உறவு ஒன்று உள்ளது. குறிப்பாக, தமிழர்களின் உணவு பழக்கத்தில் மிட்டாய்கள், பலகாராங்களுக்கு தனி உணர்ச்சிகள் உண்டு. ஆனால், இந்த சாக்லேட்களுக்கு தனி இடம் உள்ளது. நெருக்கமானவர்களுக்கு பரிசாக கொடுக்க விரும்பும் பொருளாகவும் சாக்லேட்கள் இருக்கின்றன. அதிக நெருக்கமில்லாதவர்களிடமும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அடையாளமாக இந்த சாக்லேட்கள் இருக்கின்றன.

சாக்லேட்டில் இத்தனை நன்மைகளா? சாக்லேட் சாப்பிடுவதால் ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது. இந்த மாற்றம் மனதையும், உடலையும் சுறுசுறுப்பு அடையச் செய்கிறது. மேலும், இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. சாக்லேட்கள் இருதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இவை உடலுக்குத் தேவையான கனிமங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைத் தருகிறது.

அளவுக்கு மீறினால் என்ன நடக்கும்? ஒரு வகையில் சாக்லேட்கள் சாப்பிடுவது பல பயன்களை தந்தாலும், அதிக அளவில் சாக்லேட்கள் சாப்பிடுவது தேவையற்ற கொழுப்புகளைச் சேர்க்கிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பதன் மூலம் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினசரி சாக்லேட்களை சாப்பிட்டுவதால் பற்களில் பூச்சிகள் அரிக்கும் அபாயம் உள்ளது, இவை டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. மேலும், இதில் வாசோஆக்டிவ் கனிமப்பொருள் இருப்பதால் தலைவலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: இனி வீட்டிலேயே ரசாயனம் கலக்காத சுவையான பானிபூரி செய்யலாம்.. இதோ ரெசிபி ரெடி! -

Last Updated : Jul 7, 2024, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.