ETV Bharat / state

அரசு வேலை தருவதாக கூறிய முன்னாள் ஆட்சியர்..குழந்தையுடன் கண்ணீர் மல்க மனு அளித்த பெண்! - Tirupathur collector

திருப்பத்தூரில் உயிரிழந்த கணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசு வேலை தருவதாக முன்னாள் ஆட்சியர் தெரிவித்த நிலையில், வேலை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் மனு அளித்துள்ளார்.

மனு அளித்த பெண் விஜயலட்சுமி
மனு அளித்த பெண் விஜயலட்சுமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 10:03 PM IST

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தன். இவர் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக, தென்னை மரத்தின் மீது ஏறி வேலை பார்த்த சமயத்தில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மரத்தின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.

மனு அளித்த பெண் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், முருகானந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அப்போது, முருகானந்தனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இவரது இறுதிச் சடங்கில், முன்னதாக பணியாற்றிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, மலர் வளையம் வைத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், குடும்பத்தின் ஏழ்மை நிலை அறிந்து வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அரசு வேலை வழங்குவதாக கூறிய நிலையில், இதுவரை அரசு வேலை வழங்கவில்லை. இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறேன். எனவே, புதிய ஆட்சியர் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தனது குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் எனக்கூறி முருகானந்தனின் மனைவி விஜயலட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: கல்யாண ராணி சத்யா புதுச்சேரியில் கைது.. 12 ஆண்களை ஏமாற்றி பணம் பறித்தது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.