ETV Bharat / state

'பிரதமர் வீடு' ஆசை காட்டி பாஜக நிர்வாகி பல கோடி மோசடி? - கோவை ஆட்சியரிடம் பெண்கள் புகார்! - Coimbatore PM AWAS YOJANA SCAM - COIMBATORE PM AWAS YOJANA SCAM

Coimabtore PM AWAS YOJANA SCAM: கோவையில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்து தருகிறேன் என்று கூறி பாஜக நிர்வாகி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக பெண்கள் சிலர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

COVAI PM AWAS YOJANA SCAM
COVAI PM AWAS YOJANA SCAM
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 8:42 PM IST

COVAI PM AWAS YOJANA SCAM

கோயம்புத்தூர்: கோவை அம்மன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா குமாரி. இவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PM AWAS YOJANA) திட்டத்திற்கு பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு வினோத் என்பவர் பாஜகவில் உறுப்பினாராக உள்ளதாக கூறி, வீடு வாங்கி தருவதாக மீனா குமாரியிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

அதே போல, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் வாங்கி தருகிறேன் என்று கூறியும் பல பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை மீட்டு தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீனா குமாரி மற்றும் இரு பெண்கள் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனாகுமார் மற்றும் அப்பெண்கள் கூறுகையில், "தாங்கள் வாடகை வீட்டில் இருப்பதால் எங்கேனும் அரசு குடிசை மாற்று வாரிய வீடு கிடைக்குமா என்று பார்த்து கொண்டிருந்தோம். அப்போது, வினோத் தன்னை பாஜகவில் இருக்கிறேன் என்று கூறி அறிமுகமானார். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்து தருகிறேன் என்று கூறினார்.

ஏற்கனவே தங்களால் பயனடைந்தவர்கள் என்று கூறி சிலரின் ஆவணத்தை காண்பித்தார். அவர் கட்சியில் இருக்கிறேன் என்று கூறியதாலும் ஏற்கனவே பயனடைந்தவர்கள் என்று கூறி சிலரின் ஆவணங்களை காண்பித்ததால் அதனை நம்பி, தாங்கள் தங்களால் இயன்ற பணத்தை 1 லட்சம், 50 ஆயிரம் என்று வினோத்திடம் வழங்கினோம். தற்போது அந்த பணத்தை எல்லாம் பெற்று கொண்டு வீடுகளை ஒதுக்கீடு செய்து தராமல் ஏமாற்றி விட்டார்” என்றனர்.

மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வினோத்தை நேரடியாக காவலர்கள் முன்பு நிறுத்தியும் FIR பதிவு செய்யாமல் CSR மட்டுமே வினோத் மீது பதிவு செய்ததாக தெரிவித்தனர். தற்போது அந்த வினோத்திடம் பணத்தை கேட்டு சென்றால் எப்போதும் வீட்டில் இல்லை எனவும் கூறினர்.எனவே வினோத் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

புகாருக்கு ஆளான வினோத் தரப்பில் இருந்து விளக்கம் அளித்தால் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது

இதையும் படிங்க: ரூ.150 இருந்தால் கொடைக்கானலை ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம்.. நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - Kodaikanal Tourism

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.