அரியலூர்: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியின் இருப்பு அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் வெண்மான் கொண்டான் கிழக்கு வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக இருக்கும் ராஜேஸ்வரி என்பவரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றினார். இதனிடையே, பணியின் போது நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை, உடன் பணியாற்றிய அலுவலர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஸ்வரி உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி கர்ப்பம்.. தந்தையின் இறுதிச் சடங்கின் போது பிறந்த குழந்தை.. விழுப்புரம் அருகே சோகம்! - Villupuram Death Case