தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர் ஏகேவி நகரில் வசித்து வருபவர் ஹரிபாரதிதாஸ், இந்திரா ஆகியோரின் மகன் ரோக்கேஷ் (43). இவர் சிங்கப்பூரில் கணினி பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், இவருக்கும், கும்பகோணம் பழைய அரண்மனைத்தெருவை சேர்ந்த மணிராவ் ராஜன் - நிர்மலா தம்பதியினரின் இளைய மகள் திவ்யா (35) என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது இவர்களுக்கு தீப்தா என்ற 6 வயது மகள் உள்ளார். இதில் திவ்யா நாம் தமிழர் கட்சி கும்பகோணம் மாநகரில் உறுப்பினராக செயல்பட்டு, மாநகராட்சி தேர்தலிலும் அந்த கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடதக்கது.
ரோக்கேஷ் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த காலகட்டத்தில் அவரை சந்திக்க சிங்கப்பூர் சென்று வரும் திவ்யா சிறுக சிறுக சுமார் 200 சவரன் தங்க நகைகளை கணவரிடமிருந்து வாங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கணவர் ரோக்கேஷ் வங்கி கணக்கிலிருந்து அனுப்பிய 2 கோடியே 81 லட்சம் பணத்தில் திவ்யா, தனது பெயரிலும், தனது பெற்றோர் பெயரிலும் சொத்துக்களாக வாங்கி கொண்டதாக அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், திவ்யாவிற்கு, அரசு மதுபான கடை பாரில் சப்ளையராக பணி செய்யும் இன்னம்பூர் மேலத்தெருவை சேர்ந்த நந்தகுமார் என்ற தன்னை விட 5 வயது குறைவான வாலிபருடன் திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் கடந்த 2021ம் ஆண்டு முதல் கணவர் ரோக்கேஷிடம் விவாகரத்து கோரியுள்ளார் திவ்யா. இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் திவ்யாவிற்கு நந்தகுமாருக்கு ஏற்பட்ட திருமணம் தாண்டிய உறவின் காரணாமக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் கணவர் பெயராக நந்தகுமார் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை சான்றாக ரோக்கேஷ் வைத்துக் கொண்டுள்ளதால், தன்னிடம் உள்ள சொத்துகளுக்கும் நகைகளுக்கும் ஆபத்து வந்து விடுமோ? என அஞ்சிய திவ்யா, கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஜூன் 10ம் தேதி கும்பகோணம் அரசு கல்லூரி ரவுண்டா பகுதியில், ஒரு ரவுடி கும்பல் ரோகேஷை தாக்கி காயப்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறையில் முறையான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு அதே கல்லூரி ரவுண்டான பகுதியில் நந்தகுமார் உள்ளிட்ட சிலர், அவ்வழியாக சென்ற ரோக்கேஷை வழிமறித்து அரிவாளால் காது, தலை, முதுகு, என பல இடங்களில் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த ரோக்கேஷ் தற்போது கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 25க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் கும்பகோணம் கிழக்கு போலீசார், ரோக்கேஷ் மீதான கொலை முயற்சி வழக்கில் இன்னம்பூர் நந்தகுமார் (31), மூப்பக்கோயில் சிவானந்தம் (25), திருவலஞ்சுழி அண்ணாதுரை (29) மற்றும் ஆலமன்குறிச்சி மதன் (22) ஆகிய நான்கு பேரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளனர்.
இது குறித்து ரோக்கேஷ் கூறுகையில், "தனது மகள் தீப்தா மீட்டுத் தரவேண்டும். மனைவி திவ்யாவுக்கு கொடுத்த ரூபாய் 2 கோடி 81 லட்சம் ரூபாய் மற்றும் தன்னிடமிருந்து மிரட்டி எழுதி வாங்கிய வீடு ஆகியவற்றையும் திரும்பிக் கொடுக்க வேண்டும்" என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் கள்ளச்சாராய விற்பனை.. கள்ளக்குறிச்சியில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!