கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ள பாப்பாரப்பட்டி ஊராட்சி, கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த குமரன் என்பவருக்கும், தருமபுரி மாவட்டம், எர்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் சந்தியா என்பவருக்கும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், சந்தியாவின் கணவர் குமரனுக்கும், சந்தியாவின் 20 வயதான தங்கைக்கும் என்பவருடன் நீண்ட நாட்களாக நட்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சித்தி என்ற முறையில் கௌசல்யா குழந்தையைக் கவனித்து வந்த நிலையில், மனைவியின் தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மனைவிக்குத் தெரியாமல் அவரது தங்கை உடன் அடிக்கடி தனிமையில் பேசிவந்த நிலையில், கணவரின் நடத்தையில் சந்தேகித்த மனைவி சந்தியா, கணவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்துள்ளார். இதில், தனது உடன் பிறந்த சகோதரியே தனக்கு துரோகம் செய்ததைக் கண்டு அதிர்ந்த சந்தியா, கணவருடன் வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று, தனது கணவர் தனக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்த நிலையில், தங்கை கௌசல்யாவுடன் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசியுள்ளார். இதனைக் கண்டு சந்தியா அதிர்ச்சியில் இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து, அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை, தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனை, வேலூர் சிஎம்சி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (மார்ச் 4) மாலை சந்தியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, சந்தியாவின் தாயார் பச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், பாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சந்தியா கொடுத்த வாக்குமூலம் மற்றும் குமரனின் செல்போனில் இருந்த ஆதாரங்களைக் கொண்டு, காவல்துறையினர் குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகி மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் திருப்பம்.. பெண் உள்ளிட்ட மூவர் கைது!