ETV Bharat / state

சர்ச்சையில் சிக்கிய வி3 யூடியூப் சேனல் உரிமையாளர்.. நெல்லையைச் சேர்ந்த விஜயராகவனின் பின்னணி என்ன?

V3 ONLINE TV Vijayaragavan: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று இருப்பதாக போலி ஆவணங்களை காட்டி மோசடி செய்ததாக கூறப்படும் V3 online TV உரிமையாளர் விஜயராகவன் என்கிற குருஜி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி.

வி3 யூடியூப் சேனல் விஜயராகவன்
வி3 யூடியூப் சேனல் விஜயராகவன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 5:24 PM IST

கோயம்புத்தூர்: கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மை வி3 ஆட்ஸ் (Myv3 Ads) நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த வி3 யூடியூப் சேனல் (V3 ONLINE TV ) உரிமையாளர் விஜயராகவன், மோசடி புகாரில் இன்று கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த விஜயராகவன்? நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் விஜயராகவன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மற்றும் கோவையில், V3 online TV என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். பின்னர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கி, கோடிக்கணக்கில் முதலீடு பெற்ற நிலையில், திடீரென அந்த நிறுவனத்தை மூடியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இவரது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சக்தி ஆனந்தன் அதில் இருந்து வெளியே வந்து, MY V3 ads என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்திற்கான பணிகளை விஜயராகவன் மேற்கொண்டுள்ளார். மேலும், விஜயராகவனிடம் இருந்த மூலிகைப் பொருட்கள், சித்த மருத்துவ மாத்திரைகளை பெற்று வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனிடையே, கடந்த மாதம் My V3 ads நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்வதாக வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே, Myv3 ads நிறுவனத்தின் உரிமையாளர் விஜயராகவன் எனவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

போலி பிஎச்.டி பட்டம்: இதனையடுத்து, போலீசார் விஜயராகவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது, சித்த மருத்துவம், மூலிகை பொருட்கள் உள்ளிட்டவை தயாரிப்பது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பாக முனைவர் பட்டம் படித்திருப்பதாகக் கூறி சான்றிதழ்களை கொடுத்திருந்தார். அவற்றை போலீசார் ஆய்வு செய்தபோது, அவை போலியான சான்றிதழ்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார், மதுரையில் விஜயராகவனை கைது செய்தனர். அப்போது, அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயராகவனின் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என மருத்துவ சோதனையில் தெரிய வந்த நிலையில், அவரை போலீசார் மதுரையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்துள்ளனர்.

விசாரணையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயற்கை மருத்துவம் படித்து முனைவர் பட்டம் பெற்றதாக போலி சான்றிதழை வைத்து, Myv3 Ads நிறுவனத்திற்கு மருந்து மற்றும் மூலிகைப் பொருட்களை விஜயராகவன் அனுப்பி வந்தது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மோசடி உள்பட 4 பிரிவுகளில் மாநகர குற்றபிரிவு போலீசார் விஜயராகவன் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயராகவன் 80க்கும் மேற்பட்ட இயற்கை முலிகைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகள் தயாரித்து வரும் நிலையில், மருத்துவத்துறை மூலம் அவற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் மாநகர குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

குருஜி கைது: இதனிடையே, போலீஸ் விசாரணையில், தனக்கு சர்க்கரை நோய் உள்ளது என விஜயராகவன் காவல் துறையிடம் கூறியதால், காவல்துறை பாதுகாப்புடன் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். குருஜி என்று v3 online TV மற்றும் myv3 ads நிறுவன வாடிக்கையாளர்களால் அழைக்கப்படும் விஜயராகவன் தற்போது போலீசார் பிடியில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு.. நில உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.