ETV Bharat / state

கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ஆனந்த் ராஜினாமா.. பின்னணியும் சர்ச்சைகளும்! - Coimbatore Mayor Kalpana resigned

Coimbatore Mayor Resigned: கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

Coimbatore Corporation
கோவை மேயர் கல்பனா ஆனந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 3, 2024, 4:52 PM IST

Updated : Jul 3, 2024, 6:43 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்ததாக கல்பனா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக உள்ள கோவை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வருகிறார். மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்ற இவரின் கணவர் ஆனந்த குமார் திமுகவில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவால் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து, திமுக மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஈகோ, அதிகாரிகளுடன் பனிப்போர், மாநகராட்சியில் விடப்படும் டெண்டர்களில் கமிஷன் என தொடர்ந்து எதிர்ப்புகளை சம்பாதித்த மேயர் கல்பனா, ஒரு கட்டத்தில் பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் தகராறு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் திமுக உறுப்பினர்களே கடுமையாக எதிர்த்து தலைமைக்கு புகார் அனுப்பினர். இருப்பினும், பிரச்னை எழும்போது எல்லாம் செந்தில் பாலாஜியால் மேயராக்கப்பட்டவர் என்பதால் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்களை செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சமாதானம் செய்தனர்.

இதே போன்று, தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் மேல்மட்டத்திற்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றது. மேயர் கல்பனாவின் நடவடிக்கைகளால் அமைச்சர் கே.என்.நேரு, கோவை பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாலும், எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுத்து வருவதாலும் தலைமையும் அவரை மாற்ற முடிவு செய்து உளவுத்துறை, உயரதிகாரிகள், மூத்த நிர்வாகிகள் மூலம் அவருக்கு மாற்றாக யாரை மேயராக்கலாம் என ரகசிய அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பதறிப்போன மேயர், அவசர அவசரமாக சென்னை சென்று முக்கிய நிர்வாகிகளை பார்த்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளதாகவும், ஆனால் அவருக்கு ஆதரவாக பேச முன் வராததால் மேலிடத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து மேயர் கல்பனா தனது ராஜினாமைவை கொடுத்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே மேயரை மாற்றி புதிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அதனை திமுக தலைமை கைவிட்ட நிலையில், தேர்தல் முடிவிற்கு பிறகு மேயரை ராஜினாமா செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கிய மேயர்: கல்பனா மேயராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு இல்லம் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டது. அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மேயர் கல்பனா அங்கு குடியேறிய நிலையில் வீட்டில் திடீர் திடீரென பொருள்கள் அசைகிறது, அமானுஷ்ய சக்தி இருப்பதாகச் சொல்லி அங்கு தங்காமல் மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றார்.

அங்கு கோபிநாத் – சரண்யா தம்பதி வீட்டு அருகில் மேயர் கல்பனாவின் அம்மா வீடு உள்ளதால், அங்கு கல்பனா வசித்து வந்த நிலையில் கோபிநாத்- சரண்யா தம்பதியினருடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னையால் அவர்களுடன் சண்டையில் ஈடுபட்டு, அவர்களின் வீட்டின் பின்புறம் கெட்டுப்போன உணவுகள், பயன்படுத்திய நேப்கின் கொட்டினார்கள்.

பக்கெட்டில் சிறுநீரை பிடித்து, அதையும் கல்பனாவின் சகோதரர் வீட்டின் மீது ஊற்றியதாக புகார் எழுந்தது. மேலும், மேயர் கல்பனா அந்த தம்பதியினரை மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்ட நிலையில், மேயர் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மண்டல தலைவருடன் மோதல்: கடந்த ஆண்டு மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகநாதன் தனது மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த அரசு பொருட்காட்சிக்கான கான்ட்ராக்ட் எடுப்பது தொடர்பான ஃபைல் மேயர், ஆணையருக்கு அனுப்பப்பட்டது. ஆணையர் கையெழுத்திட்ட நிலையில், மேயர் மட்டும் கையெழுத்திட முடியாது என மறுத்ததாகவும், இந்த பிரச்னை பொறுப்பு அமைச்சர் முத்துசாமிக்கு சென்றதால் அவர் புகாரை வாங்கி தலைமைக்கு அனுப்பினார்.

அரசு டெண்டர்களில் கமிஷன்? மேயராக பதவி ஏற்ற பின்னர், மாநகராட்சியில் விடப்படும் டெண்டர்களை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கவனித்து வந்தனர். செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு கோவை மாநகராட்சியில் விடப்படும் அனைத்து டெண்டர்களுக்கும் தனக்கு கமிஷன் கொடுத்தால் மட்டுமே கையெழுத்திடுவேன் எனக் கூறி பல கோடி ரூபாய் கமிஷன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மாநகராட்சிக்கு எந்த ஒரு டெண்டர் வந்தாலும் செந்தில் பாலாஜி ஆதரவு என்பதால், தனக்கு தான் டெண்டர் தர வேண்டும் என அமைச்சர் நேருவுடன் மோதல்போக்கை கடைபிடித்ததால் மேயர் மீது அமைச்சர் நேரு தலைமைக்கு புகார் அளித்தார். இது தவிர, கோவை மாநகராட்சி ஆணையளர்களாக இருந்த சுன்காரா, பிரதாப், ஆகியோருடனும் மேயர் கல்பனா மோதல்போக்கில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அண்டை வீட்டாரை காலி செய்ய சிறுநீர் வீசிய மேயர் கல்பனா குடும்பத்தினர்.. வீடியோ வெளியிட்டு பெண் குமுறல்.. கோவையில் நடந்தது என்ன?

Last Updated : Jul 3, 2024, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.