ETV Bharat / state

துரை வைகோ மீது அதிருப்தியா? கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறுவது என்ன? - திருச்சி கள நிலவரம்! - lok sabha election 2024

Trichy Durai Vaiko: திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற விமர்சங்கள் எழுந்துள்ள நிலையில் கள நிலவரம் என்னவென்று பார்க்கலாம்..

துரை வைகோ
துரை வைகோ
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 11:30 AM IST

புதுக்கோட்டை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

திருச்சி தொகுதியை பொருத்தவரையில், திமுக கூட்டணியில் மதிமுகவின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ தீப்பெட்டி சின்னத்திலும், அதிமுக வேட்பாளராகக் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக வேட்பாளராகச் செந்தில் நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு வீரர் ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

கூடுதல் கவனம் பெற்ற திருச்சி: தமிழ்நாட்டில் மையப் பகுதியில் உள்ள திருச்சி மக்களவைத் தொகுதி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆரம்பம் முதலே திமுக கூட்டணியில் இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றக் காங்கிரஸ் கட்சியும், எப்படியாவது நேரடியாகக் களம் காண வேண்டும் என்று திமுகவும் பல்வேறு வியூகங்களை வகுத்து வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.

வேட்பாளர், சின்னத்தில் இழுபறி: திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி மறுமலர்ச்சி திராவிட கழகம்(மதிமுக) போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட பின்னரும் நீண்ட இழுபறிக்குப் பின்னரே வைகோவின் மகனும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.

ஆனாலும் அவர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பது அறிவிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மதிமுகவுக்கு அவர்களது பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை, இதனால் சின்னம் தெரியாமலேயே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டமும் நடத்தி வாக்கு சேகரிப்பும் நடைபெற்ற சம்பவம் அரங்கேறியது. பின்னர் வேறு வழியின்றி தேர்தல் ஆணையம் ஒதுக்கியே சுயேச்சை சின்னமான 'தீப்பெட்டி' சின்னத்தில் களம் காண்கிறார் துரை வைகோ.

இப்படி, ஆரம்பம் முதலே தொடர் சிக்கலைச் சந்தித்து வரும் திருச்சி தொகுதியில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் துரை வைகோவுக்கு இல்லை என்ற பேச்சு அடிபடுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகத் திருச்சியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் சுய கவுரவம் தொடர்பாகப் பேசி துரை வைகோ கண்ணீர் சிந்திய காட்சிகள் இணையத்தில் வைரலானது.

துரை வைகோ மீது விமர்சனம்: இது ஒருபுறம் இருக்க துரை வைகோ மண்ணின் மைந்தன் இல்லை என்றும் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்து அதிமுக வேட்பாளர் கருப்பையா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதற்குப் பதிலளித்த துரை வைகோ, மக்களுக்குச் சேவை செய்ய மண்ணின் மைந்தராக மட்டும் இருந்தால் போதாது நல்ல மனம் வேண்டும் அது தன்னிடம் நிறைய உள்ளது எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதேநேரத்தில் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் இடையே சோர்வு நிலவுவதாகவும், துரை வைகோவை அமைச்சர்கள் ராகிங் செய்வதாகவும் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், கூட பெரம்பலூரில் தனது மகனை விடத் திருச்சியில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர் கே.என்.நேரு கவனித்து வருகிறார் என்கின்றனர் ஒரு சில திமுகவினர்.

கூட்டணிக்குள் குழப்பமா?: 'நீறு பூத்த நெருப்பு' போல் இந்த விவகாரம் புகைந்துகொண்டிருக்க திமுக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம், பெயர் வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அவர் கூறியது என்னவென்றால், "நான் சுய மரியாதைக்காகத் தேர்தலில் போட்டியிடுகிறேன், தனிச் சின்னத்தில் மட்டும் தான் நிற்பேன் கூட்டணி கட்சியினர் சீண்டிப் பார்க்க வேண்டாம் என அமைச்சர் முன்னிலையில் துரை வைகோ பேசியது எங்களை(திமுக) சற்று அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது உண்மை தான் ஆனாலும் நாங்கள் எங்கள் பணியைச் செய்து வருகிறோம். மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலை விவகாரம் அந்த கட்சியினரையே சற்று சோர்வடைய வைத்துள்ளது. காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசுக்கு மீண்டும் சீட் கொடுக்காததால் சில காங்கிரஸ் கட்சியினர் தொகுதியில் அதிருப்தியில் உள்ளனர் இப்படி எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனை என்ற அடிப்படையில் தான் தலைமையின் உத்தரவுக்கு இணங்க பணி செய்து வருகிறோம்" என்று கூறினார்.

தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் திருச்சியில் 'தீப்பெட்டி சின்னம்' வாக்காளர்களது வீடுகளை சென்று சேர்த்து ஒளியை கொடுக்குமா அல்லது எதிர்க்கட்சிகளின் தீவிர பரப்புரையில் நனைந்து ஒளி இழக்குமா என்பதை ஜூன் 4-ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் நடிப்பை பார்த்தால் நடிகர் திலகமே மயங்கியிருப்பார்" - கோவையில் முதலமைச்சரை விளாசிய ஈபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.