ETV Bharat / state

தாமிரபரணி ஆற்றில் உடைந்த 33 உறை கிணறுகள்.. 5 மாவட்டங்களுக்கு தடைபட்ட குடிநீர் விநியோகம்..! - THAMIRABARANI RIVER WELL DAMAGES

கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் 33 உறை கிணறுகள் சேதமடைந்ததனால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

தாமிரபரணியில் உடைந்துள்ள குடிநீர் விநியோக குழாய்கள்
தாமிரபரணியில் உடைந்துள்ள குடிநீர் விநியோக குழாய்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

திருநெல்வேலி: கனமழை காரணமாக தாமிரபரணிக்கு 70 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் விளைவாக பல்வேறு உறை கிணறுகள் சேதமடைந்துள்ளது. நெல்லையில் மொத்தம் 50க்கு மேற்பட்ட உறை கிணறுகள் உள்ளன.

அதிலும் குறிப்பாக, சீவலப்பேரியில் தாமிரபரணி நதிக்குள் அமைக்கப்பட்டுள்ள 33 உறை கிணறுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இந்த உறை கிணறுகள் மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அதிகாரிகள் கூறுவதென்ன: தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்து, சாதாரண நிலைக்கு திரும்பினால் மட்டுமே இந்த தேமடைந்த உறை கிணறுகளை முழுமையாக சரி செய்ய முடியும். அதன் பிறகுதான் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் குடிநீர் விநியோகம் சரி செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏற்கனவே மூன்று தினங்களாக ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் 5 முதல் 10 நாட்களுக்குள் மின் மோட்டார்கள் முழுமையாக சீரமைக்கப்படும் எனவும் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைவு.. சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல அனுமதி! - WATER FLOW IN THAMIRABARANI RIVER

தமிழிசை எகஸ் பதிவு: இந்த கனமழை பாதிப்பு குறித்து முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிரமப்படுவது எனது மனதை கவலையுறச் செய்கிறது. கனமழை நேரத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தாங்கள் படும் இன்னல்கள் என் மனதை பதைபதைக்கச் செய்கிறது. விரைவில் நிலைமை சீரடைந்து இயல்பு நிலை திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அதேபோல், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வரவேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிடுகிறது.

ஆட்சியாளர்கள் திறம்பட செயல்படாததால்தான் இந்த நிலைமை. மாற்ற வேண்டியது திராவிட மாடல் கொண்ட திமுக அரசைத்தான். சென்ற வருடம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பாலங்கள், நீர்நிலைகள், சாலைகளை சரி செய்திருந்தால், இந்த வருடம் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது அல்லவா? ஆறு, குளங்கள், ஏரிகள், தாமிரபரணி கரைகளை முறையாக பராமரித்திருந்தால் இது போன்ற கடும் பாதிப்புகளை தவிர்த்து இருக்கலாம். மக்கள் படும் துயரங்களை தடுத்திருக்கலாம். திராவிட மாடல் விடியல் அரசு இனியாவது விழித்துக் கொள்ளுமா?" என குறிப்பிட்டிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.