ETV Bharat / state

வேலூர் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்; நீர்வளத்துறை நடவடிக்கை! - ENCROACHMENT HOUSES IN VELLORE

வேலூர் அருகே கழிஞ்சூர் - தாராபடவேடு நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை நீர்வளத்துறை அலுவலர்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அகற்றியுள்ளனர்.

கழிஞ்சூர் - தாராபடவேடு நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட படம்
கழிஞ்சூர் - தாராபடவேடு நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்ட படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2024, 12:17 PM IST

வேலூர்: காட்பாடியில் கழிஞ்சூர் - தாராபடவேடு நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை நீர்வளத்துறை அகற்றியுள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியின் போது, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வேலூர் கழிஞ்சூர் ஏரி பகுதியில் 82 வீடுகள் மற்றும் தாராபடவேடு பகுதியில் 205 வீடுகள் என மொத்தம் 287 வீடுகள் ஏரி பகுதியில் உள்ளன. இப்பகுதியில் சுற்றுலா தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதால், நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தவர்களை அப்பகுதியில் இருந்து அகற்றும் படி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இயந்திரம் கொண்டு நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
இயந்திரம் கொண்டு நீர்நிலைப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் (ETV Bharat Tamil Nadu)

அதன்படி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராம்குமார் மற்றும் உதவி செயல் பொறியாளர் கோபி தலைமையில் கழிஞ்சூர் - தாராபடவேடு நீர்நிலைகளில் இருந்த வீடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் நேற்று(நவ.16) ஈடுபட்டுள்ளனர். இதில், ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வீடுகளை அகற்றியுள்ளனர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கண்கலங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை மக்கள் கவனத்திற்கு! இந்த வழித்தடத்தில் இன்று புறநகர் ரயில்கள் இயங்காது!

ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியின் போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக 30க்கும் மேற்பட்ட காவலர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிஞ்சூர் மற்றும் தாராபடவேடு பகுதி மக்களுக்கு கரிகிரி பகுதியில் மாற்று இடம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.